"தங்கம் சார்..." - ஸ்ரீ திவ்யா வெளியிட்ட ஒற்றை புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சூப்பர் ஹிட் படங்ககளை கொடுத்துவிட்டு பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் ஆள் அடையாளம் தெரியாமல் போன நடிகைகளின் லிஸ்ட்டை எடுத்து பார்த்தால் நீண்டுகொண்டே போகும்.
அதிலும் ஒரு சிலர், வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தில் இருந்து வருவார்கள். அந்தவகையில் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் ஒரே படத்தில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா.
அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக பவ்யமான அழகை வெளிப்படுத்தி நடித்திருந்த அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. பிரபல அரசியல் வாரிசு நடிகர் ஒருவரின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்தது தான் நடிகையின் இந்த நிலைக்கு காரணம் என்ற பேச்சும் கோடம்பாக்கத்தில் உள்ளது.
பட வாய்ப்புகள்குறைந்து விட்டாலே கவர்ச்சி களம் இறங்கி கதி கலங்க வைக்கும் நடிகைகள் மத்தியில் இரண்டு வருடங்களாக படமே இல்லாத போதும் கவர்ச்சி காட்டாமல் இருக்கிறார் நடிகை ஸ்ரீதிவ்யா.
இந்நிலையில், தற்போது மேக்கப் எதுவும் போடாமல் கேஷுவலான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் வாய்ப்பு இல்லையென்றாலும், கவர்ச்சி காட்டாமல் மேக்கப் கூட போடாமல் போட்டோ போடுற ஸ்ரீதிவ்யா தங்கம் சார் என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.