இன்றைக்கு மட்டுமல்ல என்றுமே அவர் தான் "மாஸ்டர்" - விஜய்சேதுபதி அதிரடி..! - அப்போ விஜய்..?
கொரோனா ஊரடங்கால் சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக ரசிகர்களுடன் திரையுலகைச் சேர்ந்தவர்கள் உரையாடி வருகின்றனர். அந்தவகையில் இணையதள கலந்துரையாடலில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி தனது சினிமா அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.
பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி, தன்னுடைய சினிமா அனுபவத்தில் ரஜினியை பற்றி சொல்லாமல் இருப்பாரா..? அவரை பற்றியும் சில விஷயங்களை பேசியுள்ளார்.
முன்னதாக, நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் என்ட்ரியால் குலை நடுங்கி போயுள்ளன அரசியல் கட்சிகள். இதனால், ரஜினி மீது இல்லாத, பொல்லாத குற்றசாட்டுகளை அள்ளி வீசி மக்களை குழப்பி விடும் முயற்சிகளை ஊடகங்கள் மூலம் முடிக்கி விட்டுள்ளன சோ கால்டு அரசியல் கட்சிகள்.
ஆனால், ஊடகங்களில் அந்த முயற்சி வெற்றி பெற போவதில்லை. மாற்றத்தை நோக்கி ஓரணியில் மக்கள் நிற்கின்றனர். அப்படி நிற்கும் மக்களை குழப்பி விடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சில ஊடகங்கள் தான் இப்போது குழம்பி நிற்கின்றன. கடந்த சில நாட்களாக நடக்கும் தரமான சம்பவங்கள் தான் அதற்கு சாட்சி.
சிலுப்பிக்கொண்டு நிற்கும் ரஜினிகாந்த்
"பேசுற வாய் ஆயிரம் பேசிட்டு போகட்டும், நான் கேக்குற மூடுல இல்ல" என சிலுப்பிகொண்டு நிற்கிறார் ரஜினி. அவரது ரசிகர்கள் மற்றும் அவரை அரசியல் தலைமையாக ஏற்றுக்கொள்ளும் மக்களும் அப்படியே இருக்கிறார்கள். 2021 தேர்தல் தமிழகத்தின் புதிய அத்தியாயம் என்று அடித்து கூறலாம்.
ரஜினிகாந்த் குறித்து விஜய் சேதுபதி
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி ரஜினிகாந்த் குறித்து தனது கருத்தை கூறியுள்ளார். அவர் பேசுகையில், “ரஜினியை பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில் பேட்ட படத்தில் நடித்தேன். அவர் மிகவும் சுறுசுறுப்பானவர். ஒரு காட்சியில் எப்படி நடிக்க போகிறோம்.
திரையில் அது எப்படி வரும்.ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற விவரங்களையெல்லாம் தெரிந்து வைத்து இருப்பார். ஒரு சாதாரண காட்சியையும் சிறப்பானதாக மாற்றி விடுவார். ஒரு காட்சி நன்றாக வந்துவிட்டால் இயக்குனரை பாராட்டுவார்.
ஒவ்வொரு காட்சியையும் அழகாக யோசித்து ரசித்து செய்கிறார். சுற்றி இருக்கும் நடிகர்களையும் கவனிப்பார். இன்றைக்கு மட்டுமல்ல என்றுமே அவர் தான் மாஸ்டர்” என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
** அப்போ விஜய்..?
தொடர்ந்து பேசிய அவர் , கதாநாயகனாகும் முன்பு தெருவில் யாருக்கும் தெரியாத சாதாரண ஆளாக சுற்றினேன். அதன்பிறகு நடிகனானேன். எனவே கதாநாயகன் என்ற இமேஜில் சிக்க விரும்பவில்லை. அதில் சிக்கினால் வெளியே வர முடியாது. கதாநாயகன் இமேஜில் சிக்க கூடாது என்றுதான் சூதுகவ்வும் படத்தில் நடித்தேன்.
நான் நடித்த 96 படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று நினைக்கவில்லை. அந்த படத்தில் நடித்த மாதிரியே நிஜ வாழ்க்கையிலும் பள்ளி கல்லூரியில் படித்த போது எனக்கு கூச்ச சுபாவம் இருந்தது. 96 படத்தின் கதையில் ஜீவன் இருந்ததால் பெரிய வெற்றி பெற்றது” என அவர் தனது பட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.