அமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கு கொரோனா உறுதி - அதிர்ச்சி தகவல்கள்..!
கடந்த இரண்டு தினங்களாக இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
77 வயதை கடந்த அமிதாப் பச்சன் ஏற்கனவே சில உடல்நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளது பாலிவுட் மட்டுமின்றி இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இவருக்காக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் பிராத்தனை செய்து வருகிறார்கள். இந்நிலையில், இவருடன் கடந்த 10 நாட்கள் தொடர்பில் இருந்தவர்களையும் டெஸ்ட் செய்ய அறிவுறுத்தி இருந்தார்.
இதனிடையே அவரின் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு டெஸ்ட் செய்யப்பட்டு இருந்த நிலையில், அவரின் மகன் மற்றும் நடிகர் அபிஷேக் பச்சனுக்கு தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெயா பச்சன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் கொரோனா டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் இருவருக்கும் கொரோனா முடிவு நெகடிவ் என வந்துள்ளதாக கூறபட்டது.
ஆனால், தற்போது மீண்டும் பரிசோதனை செய்ததில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய குழந்தை என இருவருக்கும் கொரொனா பாசிட்டிவ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.