ஒரு தடவ இல்ல, ரெண்டு தடவ அசிங்கப்பட்டுடேன்.. இனிமே விஜய்க்கு கதை சொல்ல மாட்டேன் - முன்னணி இயக்குனர் காட்டம்..!


தமிழ் சினிமாவின் வசூல் ராஜாவாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது படங்கள் மினிமம் கியாரண்டி என்ற இலக்கை எளிதாக தட்டி விடுவதால் தயாரிப்பாளர்கள் இவரை நம்பி பணத்தை கொட்ட தயாராக உள்ளனர். இவரை இயக்க வேண்டும், அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை பல இயக்குநர்களும் நடிகர்களுக்கும் உண்டு.

சமீபத்தில், இவருடன் இணைந்து நடித்த நடிகர் நெப்போலியன் தற்போது அளித்து வரும் பேட்டிகளில் விஜய் உடனான பிரச்சினை குறித்து பேசி வருகிறார். போக்கிரி படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்த போது அவருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக இதுவரை மீண்டும் அவருடன் இணையவில்லை.

மேலும் 13 வருடங்களாக விஜயுடன் பேசுவதில்லை எனவும் அவருடைய படங்களையும்பார்ப்பது இல்லை எனவும் நெப்போலியன் கூறியுள்ளார். இவரைத் தொடர்ந்து முன்னணி இயக்குனர் ஹரிக்கும் தளபதி விஜய் உடன் ஏற்பட்ட மனஸ்தாபம் பற்றி தெரிய வந்துள்ளது.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வேல் படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் தான் கூறியுள்ளார். முழு கதையையும் கேட்டு விட்டு விஜய் இந்தப் படத்தை நிராகரித்துள்ளார்.

ஆனால், அந்த படம் தாறு மாறு ஹிட் அடித்தது. அதன்பிறகு, நம்பிக்கை வந்து மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பார் என நம்பி சிங்கம் படத்தின் கதையை கூறியுள்ளார். இந்தப் படத்தின் கதையும் முழுமையாக கேட்ட விஜய் வேண்டாமென்றே நிராகரித்துள்ளார்.

இதனால் நொந்து போன ஹரி ஒருமுறையல்ல இரண்டு முறை விஜய்யிடம் கதை சொல்லி அசிங்கப்பட்டு விட்டேன். இனி அவருக்கு கதை சொல்லபோவதில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளாராம்.

மட்டுமில்லாமல், இயக்குனர் லிங்குசாமி பேட்டி ஒன்றில் சண்டக்கோழி படத்தின் கதையை விஜய்யிடம் கூறியதாகவும் ஆனால் அவர் மறுத்து விட்டதாகவும் கூறி வருத்தப்பட்டுள்ளார். இந்த படத்தின் பாதி கதையை மட்டுமே அவர் கேட்டார். மீதி கதையை கூட கேட்காமல் நிராகரித்து விட்டார் என்று குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவில் கொள்ள தக்கது.
Powered by Blogger.