வனிதா மீது பா.ஜ.க பரபரப்பு புகார்..! - ஒரே ஒரு வார்த்தை தான் காரணம்..! - விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்..!


நடிகை வனிதா விஜயகுமார் விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் திருமணம் கடந்த 27-ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி எளிமையாக நடந்தது. இதையடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னிடம் விவாகரத்து பெறாமலேயே இத்திருமணம் நடைபெற்றதாக போலீசில் புகாரளித்தார்.

இதைத்தொடர்ந்து வனிதா மற்றும் பீட்டர் பால் மீது குற்றம்சாட்டி எலிசபெத் ஹெலன் பல இணைய ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இதனால் இந்தவிவகாரம் சமூகவலைதளவாசிகள் மத்தியில் பேசுபொருளானது.

இதில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர், சூர்யாதேவி உள்ளிட்டோர் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாகவும் வனிதாவுக்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

தன்னைப்ப ற்றிய விமர்சனங்களுக்கு அடிக்கடி ட்விட்டரில் பதிலளித்து வந்த வனிதா விஜயகுமார், கஸ்தூரியின் ட்விட்டர் பதிவுகளுக்கு ஆவேசமாக பதிலடி கொடுத்திருந்தார். இருவரது ட்வீட்டுகளும் நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த ஒரு கட்டத்தில் கஸ்தூரியை பிளாக் செய்வதாக வனிதா தெரிவித்தார்.

ஊரே இவர்கள் சண்டையை சுற்றி பார்க்க, தற்போது வனிதா டுவிட்டரை டீ ஆக்டிவேட் செய்துள்ளார், இது ரசிகர்களுக்கு வருத்ததை அளித்துள்ளது.அதோடு தனக்கு நிறைய போலி அக்கவுண்டில் இருந்து நெகட்டிவ் கமெண்ட்ஸ் நிறைய வருவதால் அதிலிருந்து வெளியே வருவதாக கூறியுள்ளார்.

மேலும், ஒரு பேட்டியில் தஞ்சாவூரில் உள்ள பாதி பேர் இரண்டு பொண்டாட்டி உள்ளவர்கள் தான் என்று வனிதா பேசினார். இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பா ஜ க சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Powered by Blogger.