ச்சை..! கன்றாவி..! - வனிதாவின் கணவர் பீட்டர் பால் குறித்து முதல் மனைவியின் மகன் கூறுவதை கேளுங்க.!


வனிதா விஜயகுமார் இயக்குநரும், வி.எஃப்.எக்ஸ். டெக்னீஷியனுமான பீட்டர் பாலை காதலித்து கடந்த 27ம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்களை பார்த்த வனிதாவின் ரசிகர்கள் வாழ்த்தினார்கள்.

மற்றவர்களோ இப்படியா அனைவர் முன்பும் லிப் டூ லிப் முத்தம் கொடுப்பது என்று கேட்டார்கள்.இந்நிலையில் பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதை பார்த்தவர்கள் வனிதா ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்துவிட்டதாக குற்றம் சாட்டினார்கள். இதை பார்த்த வனிதா தனது யூடியூப் சேனலில் லைவில் வந்து விளக்கம் அளித்தார். நான் யார் குடும்பத்தையும் கெடுக்கவில்லை.

ஏழரை ஆண்டுகளாக யாரும் இல்லாமல் வாழ்ந்த பீட்டர் பாலை திருமணம் செய்தேன். என் வாழ்க்கையை பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை. 100 கோடி பேரில் பலர் தப்பு பண்றாங்க. புருஷன்னு சொல்றாங்க வெளியே போய் தப்பு பண்றாங்க. பொண்டாட்டின்னு சொல்றாங்க கேர்ள் ஃப்ரெண்ட் வச்சிருக்காங்க, இரண்டாவது மனைவி வச்சிருக்காங்க.

கூடவே வாழ்ந்து கொண்டு வீட்டுக்கு திரும்பி போறாங்க. மேலும், இணைய ஊடகத்தில் பேட்டியளித்திருந்த பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னுடைய கணவர் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், குடிப்பழக்கம் இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இதை முற்றிலுமாக மறுத்த வனிதா விஜயகுமார் பீட்டர்பால் குடிகாரர் அல்ல. அசைவ உணவு கூட சாப்பிடமாட்டார். டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர். எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

அவர் ஆல்கஹால் இல்லாத வைன் மட்டுமே எடுத்துக் கொண்டார் என்று கூறி அதற்கான வீடியோ ஆதாரத்தையும் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இதனை தொடர்ந்து, பிட்டர் பாலின் முதல்மனைவியின் மகன் இணைய ஊடகம் ஒன்றில் பீட்டர் பால்-ஐ கிழி கிழி என கிழித்து தொங்க போட்டுள்ளார். என்னுடைய அப்பா ஒன்னும் டீ-டோட்டலர் எல்லாம் கிடையாது. குடிக்கு அடிமையானவர் அவர். அதீத குடியால், மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்.

அந்த மறுவாழ்வு மையத்தில் இருந்து பல முறை தப்பிக்க முயற்ச்சி செய்துள்ளார். ஒரு முறை சுவர் ஏறி குதித்து தப்பிக்கும் போது அவரது உடம்பில் பலமான காயங்கள் ஏற்பட்டன.

மேலும், அவர் வேலை செய்யும் இடங்களில் எல்லாம் பல பெண்களுடன் தவறான தொடர்பில் இருந்துள்ளார். நான் சிறுவயதில் இருந்த போது, உன் அம்மாவை விட்டு வந்துவிடு நான் வேறு ஒரு ஆண்டியை உன் அம்மாவாக்குறேன் என்று பேசியுள்ளார்.

என் அம்மாவிடம் வேறொரு பெண்ணின் வயிற்றில் என் குழந்தை வளருகிறது என்று கூறினார். இதனால், என் அம்மா அவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டார் என்று கூறியுள்ளார்.
Blogger இயக்குவது.