"உன்னை நினைத்து" படத்தில் இருந்து விஜய் வெளியேற இது தான் காரணம் - 18 ஆண்டு உண்மையை உடைத்த நடிகர்..!


நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான உன்னை நினைத்து படத்தில் நடிகர் விஜய் தான் முதலில் நடித்தார் என்பது படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் விலகி விட்டார் என்றும் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதற்க்கான காரணம் என்று பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில், பிரபல நடிகர் ரமேஷ் கண்ணா நடிகர் விஜய் ஏன் அந்த படத்தில் இருந்து வெளியேறினார் என்ற உண்மையை போட்டு உடைத்துள்ளார். நடிகர் சூர்யா சில வெற்றி படங்களை கொடுத்துள்ளார், இன்று அவருக்கான நேரம் சரி இல்லை என்பதால், தொடர்ந்து தோல்வி படங்களையே தந்து வருகிறார் என ஒரு விமர்சனம் இருக்கிறது.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் என்றால் அது அயன் படம் தான் அதற்கு பிறகு வந்த படங்கள் எல்லாம் ரசிகர்களை நம்பவைத்து ஏமாற்றிய ரகம் தான். இதனால், சூர்யாவை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்களும் பயப்படுகிறார்கள்.

இவரின் வெற்றி படங்கள் விஜய், அஜித் இன்னும் சில நடிகர்கள் வேண்டாம் என்று சொன்ன கதைகள் தான். 16, 17 வருடங்களுக்கு முன், இவர் நடிப்பில் வெளியாகி சொல்லி அடித்த படம் “உன்னை நினைத்து” அந்த படத்தை இயக்கியது 90’S கிட்ஸ் ஃபேவரிட் விக்ரமன். 

இந்தப் படம் சூர்யாவின் சினிமா வாழ்கையில் பெண் ரசிகர்கள் வருவதற்கு இந்த படம் தான் அடித்தளமாக அமைந்தது. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது முகபாவங்களின் மன்னன் விஜய்தான். 

இவருக்கு கதை பிடித்துப் ஓகே கூட சொல்லிவிட்டார். அவ்வளவு ஏன் ஒரு சில சில ஷூட்டிங் கூட நடந்தது. விக்ரமன் , விஜய்க்கு ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் விஜய் இந்த படத்தில் நடிக்க முடியாமல் ஆகியது. 

அந்த படம் சூர்யாதான் நடிக்க வேண்டும் என இருப்பதால் அவர் உள்ளே நுழைந்தார். தற்போது, விஜய் இந்த படத்தில் நடிக்காமல் போனதற்கு காரணம் என்ன என்று நடிகர் ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

நடிகர் விஜய் இனிமேல் காதல் சப்ஜெக்ட் படங்களில் நடிப்பது இல்லை ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு எடுத்ததால் தான் படத்திலிருந்து விலகி விட்டார் என்று கூறியுள்ளார் ரமேஷ் கண்ணா.
Blogger இயக்குவது.