ரெட்டை நாற்காலி - தலைவருக்கு பின்னால் தான் சூரியன் - காப்பு - கூலர் என முழு டீட்டெயிலிங் - #45YearsOfRajinismCDP


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ வெளியாகி 45 ஆண்டுகள் நிறைவடைகிறது. சினிமாத் துறையில் அவர் கால் பதித்து 45 ஆண்டுகள் நிறைவடைவதால், சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் #45YearsOfRAJINISM எனும் ஹேஷ்டேக்கில் இதனை கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், பிரபல மலையாள டாப் நட்சத்திரங்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர், 45 ஆண்டுகால ரஜினியின் திரை வாழ்க்கையை கொண்டாடும் வகையில் பொதுவான CDP-ஐ வெளியிட்டுள்ளனர். நவம்பர் மாதத்தில், ரஜினியின் கட்சி துவக்கப்படுகிறது. 

2021 ஜன., மாதம், கூட்டணி கட்சிகளின் தலைவர்களை அழைத்து, பிரமாண்டமான மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.முதல்வர் வேட்பாளராக, தன்னை முன்னிலைப்படுத்த, ரஜினி விரும்பவில்லை. 'நான் கை காட்டுகிறவர் தான், முதல்வர் வேட்பாளர்' என ஏற்கனவே, தன் ரசிகர்களிடம், ரஜினி அறிவித்து விட்டார். 

இந்நிலையில், ரஜினியின் இந்த பேட்டிக்கு பிறகு 'அடுத்த முதல்வர் யார்' என்ற கேள்வியை மையப்படுத்தி, மாநகரம், நகரங்களை உள்ளடக்கிய, 100 சட்டசபை தொகுதிகளில், டில்லியை சேர்ந்த நிறுவனம், 'சர்வே' எடுத்துள்ளது. அந்த சர்வே அறிக்கையில், 85 சதவீதம் பேர், ரஜினி கட்சி துவக்கினால், அவர் முதல்வராவார் என்றும், ரஜினி கட்சி துவக்கவில்லை என்றால், தி.மு.க., ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது. 

அரசியல் மாற்றத்தை வரவேற்க மக்கள் முழு மனதாக இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகின்றது. இதனை அறிந்து கொண்ட திமுக ரஜினிகாந்த் மீது ஏதாவது அவநம்பிக்கையை ஏற்படுத்தி விட வேண்டும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்து வருகின்றது.

ஆனால், அவர் மீது குறை சொல்ல வலுவான ஒரு பாயின்ட் இல்லாமல் ரஜினி பாஜக ஆதரவாளர், மதவாதி என குண்டுசட்டிக்குள்ளேயே குதிரை ஒட்டிக்கொண்டிருகின்றது.

மக்கள் ரஜினி மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்று சமூக வலைதளங்களில் வெளியாகும் பதிவுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.

இந்நிலையில், ரஜினி ரசிகர்கள் உருவாக்கியுள்ள 45வருடரஜினியிசம் காமன் dp-யில் பல டீட்டெயிலிங் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமாக ரஜினியின் கையில் அணிந்துள்ள காப்பில் "NOW or NEVER" என்ற வாசம் இடம் பெற்றுள்ளது.

ரஜினி ஐந்து தலைமுறைகளை பிரதிபளிக்கும் வகையில் அபூர்வ ராகம் படத்தில் ரஜினி அறிமுகமாகும் காட்சி முதல், காலா வரையிலான புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், ரஜினிக்கு பின்னால் ஒரு சூரியன் இடம் பெற்றுள்ளது. மேலும், சூரியனின் கதிர்கள் போல துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரஜினிக்கு பின்னால் தான் சூரியன் என்று சூசகம் காட்டியுள்ளனர் அவரது ரசிகர்கள்.

மேலும், அவரதுரசிகர்கள் அவரை பின் தொடர அவர் வழிநடத்தி செல்வது போன்ற புகைப்படமும் உள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் அணிந்துள்ள கூலரில் வலது பக்கம் தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகம் இடம் பெற்றுள்ளது. ரஜினி வலது சாரி சிந்தனை கொண்டவர் என்பதை வலது பக்கம் கண்ணாடியில் இடம் பெற செய்து சுட்டிக்காட்டியுள்ளனர் ரஜினி ரசிகர்கள்.


ரெட்டை நாற்காலி :




பொதுவாகவே படப்பிடிப்பு தளங்களில் இரண்டு நாற்காலிகள் போட்டு தான் அமருவார். அது தான் அவரது அரசியல் கொள்கையும். கட்சிக்கு ஒரு நாற்காலி. ஆட்சிக்கு ஒரு நாற்காலி.

கட்சி வேற.. ஆட்சி வேற.. கட்சியை நான் கவனிச்சுக்குறேன்... ஆட்சியை இளைஞர்கள் கவனிக்கட்டும். பாலும், தண்ணியும் கலக்க கூடாது. பாணிக்கா பாணி, தூத்கா தூத் என்று கூறுவார்.

அதனை பிரதிபலிக்கும் வகையில் CDPயிலும் இரண்டு நாற்காலிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
Powered by Blogger.