குஷ்பு கையில் இருக்கும் குழந்தை யாருன்னு தெரியுமா..? - தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
நடிகர் விஜய்யின் "கில்லி" படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஜெனிஃபர் நான்ஸி தான் இந்த குழந்தை நட்சத்திரம். இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் பிரபு, நடிகை குஷ்பு நடிப்பில் வெளியான கிழக்கு கரை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
சமீபத்தில், ‘கில்லி’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தது தற்போது அது எனக்கு பெரிய மைனஸாகி விட்டது என்று நடிகை ஜெனிபர் வருத்தத்துடன் கூறியுள்ளார். விஜய்யின் திரை பயணத்தில் மிகவும் முக்கியமான படம் ‘கில்லி’.
இந்தப் படத்தை இன்றளவும் விஜய் ரசிகர்களால் மறக்க முடியாத படம். இந்தப் படத்தை தரணி இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.
மேலும் படத்தில் பிரகாஷ் ராஜ் வில்லனாக நடித்திருப்பார். அத்துடன் படத்தில் விஜய்யின் தங்கை ஜெனிபர் என்பவர் நடித்திருப்பார். விஜய்யின் தங்கையாக நடித்த நடிகை ஜெனிபர், இப்போதும் ரசிகர்கள் நினைவில் தங்கையாக காட்சியளிக்கிறார்.
நடிகை ஜெனிபர் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பேசினார். அப்போது அவர், ‘‘விஜய்யுடன் ‘கில்லி’ படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தது மிகப்பெரிய பாக்கியம். ஆனால் அதில் இருந்து மக்கள் வெளிவராதது தான் எனக்கு பெரிய கஷ்டமாக இருக்கிறது.
ஏனெனில் யாராலும் என்னை நாயகி என்று ஏற்க முடியவில்லை. ‘கில்லி’ படத்தில் குட்டி பெண்ணாக நடித்த பெண்ணா இது, இவ்வளவு பெரியவளா என்று கூறிகிறார்கள்.
எனக்கு நாயகியாக நடிக்க வேண்டும் என்பது ஆசை, ஆனால் ‘கில்லி’ படத்தில் இருந்து மக்கள் வெளிவராததால் எனக்கு படம் மைனஸாக அமைந்தது’’ என்று வருத்தத்துடன் கூறினார்.