அட்லியை துரத்தி அடிக்கும் தயாரிப்பாளர்கள் - என்னடா இது கமர்ஷியல் இயக்குனருக்கு வந்த சோதனை.!


தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற எடுத்த நான்கு படங்களுமே சூப்பர்ஹிட் படமாக கொடுத்தவர்தான் அட்லீ. இவர் மீது இருக்கு கதை பஞ்சாயத்து ஒரு பக்கம் இருந்தாலும் அவரது மேக்கிங் பலருக்கும் ஃபேவரைட். இருந்தாலும் சமீப காலமாக அட்லீயை வைத்து படம் தயாரிக்க எந்த ஒரு தயாரிப்பாளர்களும் தயாராக இல்லை என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. 

அட்லீ கடைசியாக விஜய்யை வைத்து இயக்கிய பிகில் படம் 300 கோடி வசூலை செய்திருந்தாலும் அட்லீக்கு வாய்ப்பு தர மாட்டேன் என பல தயாரிப்பாளர்கள் அடம் பிடிக்கிறார்கள். சரி, ஹிந்திக்கு செல்லலாம் என்று பார்த்தாலும் அங்கேயும் அதே நிலைமைதான். 

முதலில் ஓகே சொன்ன ஷாருக்கான் பிறகு அட்லீயின் கதைத் திருட்டை கண்டுபிடித்து விட்டதாக சமீபத்தில் வலைப்பேச்சு நண்பர்கள் தெரிவித்தனர். தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் யாரையாவது வைத்து படம் இயக்கலாம் என எந்த நடிகர் மற்றும் தயாரிப்பாளரிடம் கதை கூற சென்றாலும் அட்லீக்கு ஆதரவாக எதுவுமே நடக்கவில்லையாம். 

அதற்கு காரணம், பழைய கதைகளை சுடுவதால் மட்டுமல்ல. தயாரிப்பு தரப்புக்கு சரியான பட்ஜெட் கொடுத்து படம் இயக்க முடியாமல் தடுமாறி வருகிறாராம். அதே போல் தயாரிப்பாளர் செலவில் தன்னுடைய குடும்பத்தையே கூட்டிக் கொண்டு கூத்து அடித்தால் யார்தான் அமைதியாக இருப்பார்கள். 

பட்ஜெட் செலவில் படத்தை முடித்துத் தருகிறேன் என அட்லீ சூடம் ஏற்றி சத்தியம் செய்தாலும் வாய்ப்பில்ல ராஜா என விரட்டி வருகிறார்கள். அனேகமாக இனி அட்லீ சொந்த தயாரிப்பில் சின்ன பட்ஜெட் படங்களை தயாரிக்க அதிக வாய்ப்பு இருக்கிறதாம். இனி கொஞ்ச நாள் இயக்குனராக இல்லாமல் தயாரிப்பாளராக வலம் வரப் போகிறாராம்.
Blogger இயக்குவது.