ஜோதிகாவின் சகோதரி நக்மா தெரியும் - ஆனால், உடன் பிறந்த இன்னொரு அக்காவை பார்த்துள்ளீர்களா..?
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தனது சொந்த சகோதரிகளிடம் போட்டி போடும் அளவிற்கு திரையுலகம் போய்க்கொண்டு இருக்கிறது அந்த வகையில் பல நடிகைகள் தன் சகோதரிகளை திரையுலகில் அறிமுகப்படுத்தி போட்டியிட்டு வருகிரார்கள்.
அந்த வகையில் ஜோதிகாவும் நக்மாவும் சகோதரிகளாக திரையுலகில் வலம் வந்தவர்கள். இவர்கள் இருவருக்குமே படவாய்ப்புகள் குவிந்து கொண்டே இருந்தன.
அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பாட்ஷா திரைப்படம் மற்றும் பிரபு தேவாவுடன் நடித்த காதலன் திரைப்படம் இந்த இரண்டு திரைப்படமும் இவரை சினிமாவில் உச்சத்தில் நிற்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த நக்மா தனது திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டே விலகி விட்டார்.
இவ்வாறு அவர் செய்தது ரசிகர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.ஆனால் ஜோதிகா பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் சில திரைப்படங்களில் நடித்து வந்தார். மேலும் தற்பொழுது தன்னுடைய கணவனின் சகோதரரான கார்த்தி நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் இவரும் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜோதிகாவும் நக்மாவும் சகோதரிகள் என்று உலகத்துக்கே தெரிந்ததுதான். ஆனால் அவர்கள் இருவரும் உண்மையான சகோதரிகள் கிடையாதாம். ஜோதிகா மற்றும் நக்மாஆகிய இருவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் தான்.
ஆனால், இருவருக்கும் வேறு வேறு தந்தைகள். நக்மாவின் தாய் ஒரு இஸ்லாமிய பெண். இவரது பெயர் ஷாம்னா காசி என்பதாகும்.. இவருக்கு, அர்விந்த் பிரதாப்சின் மொரார்ஜி என்பவருக்கும் 1969-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 1973-ம் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
1973-ம் ஆண்டு நக்மாவின் தாய் ஷாம்னா காசி கருவுற்று இருந்த நிலையில் கணவர் விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு, நக்மா 1974-ம் ஆண்டு பிறந்தார்.
நக்மா பிறந்த கையுடன் 1975-ம் ஆண்டு சந்தர் சாதனா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் நக்மாவின் அம்மா ஷாம்னா காசி. அதனை தொடர்ந்து, 1978-ம் ஆண்டு நடிகை ஜோதிகா பிறந்தார் நடிகை ஜோதிகா.
அதன் பிறகு ஜோதிகாவின் உடன் பிறந்த இன்னொரு சகோதரியும் உள்ளார். அவர் பெயர் ராதிகா சாதனா என்பதாகும். இவர்கள் மூவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களல் வைரலாக பரவி வருகிறது இதோ அந்த வைரலாகும் புகைப்படம்.