ஃபுல் போதையில் கையில் மதுக்கோப்பையுடன் சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன் - வனிதா வெளியிட்ட புகைப்படம்..!


கடந்த 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை வனிதா 3வது முறையாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னரே பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து பிள்ளைகள் இருப்பது வெளியே வந்தது. இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் பேசு பொருளாக மாறியது.

அந்த வரிசையில் சேர்ந்து கொண்ட சூர்யா தேவி என்ற பெண், தேவையில்லாமல் வனிதாவின் 3வது திருமணம் குறித்து யூ-டியூப்பில் தரக்குறைவாக விமர்சித்து வந்தார்.

இதனால் கடுப்பான வனிதா அவர்களை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தார். லக்ஷ்மி ராமகிருஷ்ணனை நேர்காணலின் போது கெட்ட வார்த்தையிலும் பேசி திட்டி தீர்த்தார். இதனால் சமூக வலைதளங்கள் அல்லோகளப்பட்டது.

தொடர்ந்து நான்கு பேர் மீதும் தன்னை பற்றி அவர்கள் அவதூறாக பேசுவதாக கூறி போலீஸில் புகார் அளித்தார். இதில் சூர்யாதேவி கைது செய்யப்பட்டார். இருப்பினும் இவர்களுக்கு இடையிலான பிரச்சனை ஓய்ந்த பாடில்லை.

குறிப்பாக சூர்யா தேவி ஒரு கஞ்சா வியாபாரி என்றும், அதற்க்கு ஆதாரமாக ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார் வனிதாவின் லாயர்.இதை தொடர்ந்து, வனிதா தன் மீது அவதூறு பரப்பி வருவதாக, சூர்யா தேவியும் பதிலுக்கு வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதில் பொய்யான தகவல்களை வெளியிட்டு தனக்கு மன உளைச்சலை வனிதா ஏற்படுத்தியதாக புகார் அளித்திருந்தார். இந்நிலையில் வனிதா அளித்த புகாரின் பேரில் நேற்று நள்ளிரவில் சூர்யா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்நிலையில் இந்த பிரச்னை கடந்த வாரம் முழுக்க அமைதியாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் சூர்யா மற்றும் நாஞ்சில் விஜயன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் சின்னத்திரை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Powered by Blogger.