விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முதலில் நடிகக்விருந்தது இவரா..? - ப்ச்ச்.. மிஸ் பண்ணிடாரே..!

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களின் ஒருவர் கௌதம் மேனன். இவர், இயக்கத்தில் நடிகர் சிம்பு, த்ரிஷா நடித்த வெளியான படம் தான் "விண்ணைத்தாண்டி வருவாயா". இப்படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார் நடிகர் சிம்பு.

தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்து ஒரு படம் "விண்ணைத்தாண்டி வருவாயா". மேலும் இப்படத்தில் வந்த சிம்புவின் கார்த்திக் கதாபாத்திரம் மற்றும் நடிகை த்ரிஷாவின் ஜெஸ்ஸி கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அதே போல் இப்படத்தில் சிம்புவுடன் பயணிக்கும் நடிகர் கணேஷ் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு VTV கணேஷ் என்றே எல்லோராலும் அழைக்கபடுகிறார். அதுவும் அவர் கூரும் " இங்க என்ன சொல்லுது ஜெஸ்ஸி ஜெஸ்ஸி சொல்லுதா " என்று ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், விடிவி கணேஷ் நடித்திருந்த அந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் விவேக் தான் நடிக்க இருந்தாராம்.

ஆனால் கால்சீட் இல்லாத காரணத்தால் அப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது. அதன்பின் தான் சிம்புவின் உதவியால் விடிவி கணேஷ் நடித்தாராம். அவர் ஏற்று நடித்த அந்த கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
Blogger இயக்குவது.