தொலைபேசி மூலம் கற்பழிப்பு மிரட்டல் - நடிகை குஷ்பு வெளியிட்ட ஆதாரம்..! - ரசிகர்கள் அதிர்ச்சி..!
நம்ம 90ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த குஷ்பு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து தனக்கென பல லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்துள்ளார்.
தமிழில் ரஜினி, கமல், பிரபு, கார்த்திக் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். இதில் பிரபுவுடன் நடித்த சின்னதம்பி படம் இவருக்கான ரசிகர் பட்டாளத்தை பல மடங்கு உயர்த்தியது.
90ஸ் கிட்ஸ்களுக்கு மட்டும் அல்ல என்றும் கனவுகன்னி இவர் தான். சிங்கார வேலன் படத்தில் இடம் பெற்ற இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே என்ற பாடலில் கவர்ச்சி காட்டை கட்டவிழ்த்து விட்டுருப்பார் குஷ்பு. அறிமுகமான காலத்திலேயே பிகினி உடை வரை கவர்ச்சியில் தாராளம் காட்டியவர் குஷ்பு.
இவரது, சூடான வீடியோக்கள் இன்றும் யூ-ட்யூப்பில் லட்சக்கணக்கான பார்வைகளை அள்ளுகின்றன. அந்த அளவுக்கு கவர்ச்சியை அள்ளி அள்ளி கொடுத்தவர் நடிகை குஷ்பு.
சினிமா மட்டுமல்லாமல் சீரியலில் நடிப்பது மற்றும் அரசியலிலும் இயங்கி வருகிறார் குஷ்பு. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் குஷ்பு தற்போது கட்சியில் நீக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தனது பதிவில், ''எனக்கு குறிப்பிட்ட ஒரு ஃபோன் நம்பரில் இருந்து தொடர்ந்து கற்பழிப்பு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஃபோன் செய்பவரின் பெயர் சஞ்சய் ஷர்மா என்றும், இடம் கொல்கத்தா எனவும் காட்டுகிறது.
கொல்கத்தா போலீஸ் இந்த விஷயம் என்னவென்று விசாரிக்கவும்'' என அவர் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த குறிப்பிட்ட ஃபோன் நம்பரையும் அவர் வெளியிட்டுள்ளார்.