அட கொடுமைய..! - இருக்குற தலைவலியில இது வேறையா..? - வைரலாகும் புகைப்படம் - கடுப்பில் ரசிகர்கள்..!

 
கொரோனா லாக்டவுன் முழுதாக ஆறு மாதத்தை விழுங்கி விட்டது. தயாரிப்பு மற்றும் உற்பத்தி துறை முதல் சேவை துறை வரை பெருத்த அடி வாங்கி உள்ளனர். உயிரோடு இருப்பதே இந்த வருடத்தின் லாபம் என பெரிய பொருளாதார அறிஞர்கள் கூறுகிறார்கள்.
 
180 நாட்களுக்கும் மேலாக உலகம் முழுதும் எந்த ஒரு புது திரைப்படங்கள் ரிலீசாகாமல் இருக்கிறது. சென்சார் முடித்து படத்தை ஹார்ட் டிஸ்கில் பக்காவாக வைத்திருக்கும் பல தயாரிப்பாளர்களின் Releaseக்கு காத்திருக்கிறார்கள். 
 
ஆனால், தற்போது இருக்கும் நிலைமையை பார்த்தால் மாஸ்டர் படம் கூட OTT வலைதளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்து விடுவார்கள் போல இருக்கிறது. இந்தநிலையில், நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தால் படத்திற்கு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.
 
தியேட்டரில் ஒரு படம் 100 நாள் ஓடியதை கொண்டாடிய ரசிகர்களை பார்த்திருக்கிறோம். ஆனால், உலக வரலாற்றில் முதன்முறையான OTT தளத்தில் 100 நாள் ஓடியதை கொண்டாடிய கோஷ்டியை இன்னிக்கு தான் பார்க்கிறோம் என்று கலாய்கிறார்கள் நெட்டிசன்கள். 
 
தமிழில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ அமேசானில் வெளியாகி 100 நாட்களை தொட்டுள்ளது. இதை கொண்டாடும் வகையில் அமேசானே தெருவுக்கு தெரு 100 நாள் போஸ்டர் ஒட்டி உள்ளார்கள். 


 
ஏற்கனவே சூரரைப்போற்று படம் அமேசானின் நேரடியாக வெளியாவதால் சூர்யா ரசிகர்களுக்கு ஏமாற்றம். இந்நிலையில், இந்த போஸ்டர் அவசியமா..? என்று கடுப்பில் உள்ளனர் சூர்யா ரசிகர்கள்.
Blogger இயக்குவது.