"சட்டை - ஜீன்ஸ் பேண்ட்.." - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் குஷ்பு - வாயை பிளந்த சக நடிகைகள்..!


1980 முதல் இன்று வரை சினி துறையிலும் சரி... தற்போது அரசியலிலும் சரி ஜொலித்து வருபவர் நடிகை குஷ்பூ. 80’ஸ் மற்றும் 90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். 
 
தமிழகத்தில் கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் குஷ்புவை தவிர வேறு யாருக்கும் இருந்தது இல்லை. ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ், சரத்குமார், பிரபு என அப்போதைய முன்னணி நடிகர்கள் தங்களது படத்தில் நடிக்க வைக்க முதலில் தேர்வு செய்வது குஷ்புவை தான்.
 
சமீபத்தில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். கடந்த வாரம் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அவர்களின் முன்னிலையில் தன்னை பா.ஜ.கவில் இணைந்து கொண்டார். 
 
விரைவில் தமிழக அளவில் இவருக்கு பொறுப்பு வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். இப்படி அரசியல், சினிமா என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் குஷ்பு சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். 
 
மகாராஷ்டிராவில் பிறந்து தென்னிந்திய சினிமாவில் கால் பதித்த குஷ்பூ முதன்முதலாக கலியுக பண்டவலு என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
தமிழைத் தவிர்த்து மலையாளம் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். 
 
புகழின் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பு, 2 பெண் பிள்ளைகளுக்கு தாயாக மகிழ்ச்சியாக குடும்பத்தை நடத்தி வருகிறார். 
 

இந்நிலையில், கருப்பு சட்டை, ஜீன்ஸ் பேண்ட் சகிதமாக ஒரு செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் குஷ்பு. இதனை பார்த்த சக நடிகைகள் அவரை பார்த்து வியந்தபடி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஒரு தரப்பு ரசிகர்கள் அரசியல் ரீதியிலான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.