"எனக்கு வயசாயிடுச்சி - அந்த சீனை வேற யாராச்சும் வச்சி பண்ணிக்கோங்க.." - கதறிய சூர்யா..!


சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வருகிறது. 
 
இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. 
 
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி அக்டோபர் 30-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் இத்திரைப்படம் நேரடியாக ரிலீசாகிறது. 
 
இந்த படத்தில் 96 கேரக்டர்கள் இடம்பெறுகிறது. சூர்யா 18 வயது இளைஞர், 30 வயது நடுத்தர வயதுடையர், 50 வயதை தாண்டியவர் என 3 கெட்அப்களில் நடித்துள்ளார். இதில் 18 வயது இளைஞர் வேடத்தில் சூர்யா பிடிவாதமாக மறுத்துள்ளார். 
 
தனக்கு 45 வயதாகி விட்டதாகவும், 18 வயது இளைஞனாக நடித்தால் சரியாக இருக்காது என்றும் கூறியிருக்கிறார். ஆனால் இயக்குனர் சுதா கொங்கரா வற்புறுத்தி நடிக்க வைத்துள்ளார். 
 
இதுகுறித்து சூர்யா கூறும்போது "திடீரென்று சுதா என்னை இந்தப் படத்தில் 18 வயது பையனாக நடிக்க வேண்டும் என்று சொன்னார். கடைசி வரை வேறு யாரைவாது வைத்து செய்துவிடுங்கள், எனக்கு 45 வயதாகப் போகிறது எனச் சொன்னேன். 
 
ஆனால் வற்புறுத்தி நடிக்க வைத்து விட்டார். என்றார். ஏற்கெனவே வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா 18 வயது இளைஞனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.