"லோகேஷ் கனகராஜ் அடுத்த அட்லியாக இருப்பாரோ..?.." - பீதியில் விஜய் ரசிகர்கள்..!
லோகேஷ் கனகராஜ் இயக்கி, கார்த்தி நடித்த ‘கைதி’ திரைப்படம் நல்ல வரவேற்பு மற்றும் விமர்சனங்களைப் பெற்றது. படத்தில் பாடல்கள் இல்லை, ஹீரோயின் இல்லை, முழுக்க ஆக்ஷ்ன் தான் என்று சொல்லித்தான் படத்தை விளம்பரமே செய்தார்கள்.
இதனால் இப்படம் வெற்றி பெறுமா? என பலரும் சந்தேகித்தனர். ஆனால் தமிழ் சினிமாவின் வழக்கமான கிளிஷேக்களை உடைத்தெறிந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி அடைந்தது.
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டராக மாறிய இந்த கைதி திரைப்படம், ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதனை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இருக்கிறது.
இந்த படம் நிச்சயமாக ஹிந்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என இப்படத்தின் தயாரிப்பாளர் உறுதியுடன் தெரிவித்தார். இந்த நிலையில் கார்த்திக் நடித்த சர்வதேச திரைப்பட விழாவிற்கு கைதி செல்கிறது.
அதாவது, டொரன்டோவில் நடைபெற உள்ள திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு கைதி திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது "மாஸ்டர்" படத்தில் நடித்துள்ளார் நடிகர் விஜய்.
இதனால், விஜய் ரசிகர்கள் செம ஹேப்பியாக இருக்கிறார்கள். ஆனால், இவர் இயக்கிய கைதி திரைப்படம் ஹாலிவிட்டில் கடந்த 1976-ம் ஆண்டு வெளியான "Assault on precinct 13" என்ற படத்தில் அட்டர் காப்பி என நெட்டிசன்கள் தற்போது கண்டு பிடித்துள்ளனர்.
மகளின் பாசப்போராட்டத்தை மையமாக கொண்டு வெளியான "Assault on precinct 13" படத்தின் டிட்டோ தான் "கைதி" திரைப்படம் என்று கூறி வருகிறார்கள். ஏற்கனவே, அட்லியின் பிடியில் விஜய் சிக்கி தவித்து இப்போது தான் வெளியே வந்துள்ளார்.
அட்லி என்றாலே காப்பி தான் என்ற கருத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நிலவுகின்றது. அட்லியும் இதை மறுப்பது கிடையாது. ஸ்வரங்கள் ஏழு தான் இருக்கின்றது.. சரிகமபதநி என்று பாட்டு பாடி சமாளித்துவிடுகிறார்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் அடுத்த அட்லியாக இருப்பாரோ..? என்று பீதியில் இருக்கின்றனர் ரசிகர்கள். மேலும், மாஸ்டர் திரைப்படம் எந்த படத்தையும் காப்பி அடித்ததாக இருந்துவிட கூடாது என்று பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர்.