"கிரேட் எஸ்கேப்.." - முரட்டு தோல்வியடைந்த படத்திலிருந்து கடைசி நேரத்தில் விலகிய சூர்யா..!


தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. ஆரம்பத்தில் சாக்லெட் நாயகனாக வலம் வந்த சூர்யா இப்போது ஆக்ரோஷமான ஆக்ஷ்ன் ஹீரோவாக பட்டையைக் கிளப்பி வருகிறார்.
 
இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் வரும் 12ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
 
தமிழையும் தாண்டி சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கில் செம்ம ரெஸ்பான்ஸ் உண்டு. கோலிவுட்டி அளவிற்கே அங்கும் வசூலில் சாதனை படைத்து வருகிறார். அப்படியிருக்கும் சூர்யாவிற்கு சம்பளமும் சும்மா இல்லை கோடிகளில் கொட்டிக்கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். 
 
தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து அதை வெற்றிகரமாக கொண்டு செல்லும் அளவிற்கு சூர்யாவின் கெரியர் ஸ்மூத்தாக சென்றுகொண்டிருக்கிறது. சூர்யா தற்போது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள நவரச என்ற Anthology திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முகமூடி. தமிழ் சினிமாவில் வெளியான முதல் சூப்பர் ஹீரோ திரைப்படமான முகமூடி ரசிகர்களிடம் வரவேற்பை பெற தவறியது. 
 
மேலும் இப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க அணுகியதே நடிகர் சூர்யாவை தானாம், பின்னர் சில காரணங்களால் அவர் இப்படத்தை தவறவிட ஜீவா நடித்துள்ளார் என தெரியவந்துள்ளது.நல்ல வேளை சூர்யா எஸ்கேப் ஆகிவிட்டார்.
Blogger இயக்குவது.