"இவங்கள போய் ஆண்ட்டி லிஸ்ட்ல சேத்துட்டீங்களேடா அப்ரண்டீஸ்களா.." - சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..!
நடிகை பிரவீனா 18 வயது பருவ மொட்டாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் சிலதை தற்போது வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவர்மீது வைத்திருக்கும் தற்போதைய பார்வை மாறியுள்ளது.
இவர் ப்ரியமானவள் சீரியல் மூலம் பிரபலமானவர். அதில் ஒரு அம்மாவாக அவர் வெளிப்படுத்திய நடிப்பு சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் கவர்ந்தது.
பிரியமானவள் சீரியலில் நடிக்கும் முன்பே இவர், பல மலையாள சீரியல் மற்றும், மம்முட்டி , மோகன் லால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.
இவர் இரண்டு முறை சிறந்த டப்பிங் ஆர்டிஸ்டுக்கான விருதுகளை வாங்கியுள்ளார். மக்களிடையே சின்னத்திரைக்கு பெரும் அளவு வரவேற்பு இருந்து வருகிறது.
அதில் சீரியல் களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு அளவில்லா ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.அந்த வகையில் மலையாள நடிகையான பிரவீனா அவர்கள் தமிழ் சினிமாவில் அதாவது வெள்ளித்திரையில் தனது முதல் படமான கௌரி, ராஜதந்திரம் போன்ற படங்களில் அறிமுகமாகினார்.
மேலும் நடிகை பிரவீனா அவர்கள் அன்றைய முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.தற்போது நடிகை பிரவீனா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.
அதன் அடிப்படையில் அடிக்கடி இவர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவர்.இளசுகள் மத்தியில் பிரபலமான பேஸ் ஆப் மூலம் தன்னுடைய புகைப்படத்தை சிறு வயது பெண் போல மாற்றி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிரவீனா.
இதனை பார்த்த ரசிகர்கள், பச்ச மண்ணு.. இவங்கள போய் ஆண்ட்டி லிஸ்ட்ல சேத்துட்டீங்களேடா அப்ரண்டீஸ்களா என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.