தன்னை விட வயது குறைவான முன்னணி நடிகரின் மகனுடன் ரொமான்ஸ் செய்யவுள்ள பூஜாகுமார்..!
4 பெண்களுடன் குடும்பம் நடத்தி பிரிந்திருந்த நடிகர் கமல்ஹாசன் 65 வது வயதில் நடிகை பூஜாகுமாருடன் வெளிப்படையாகவே குடும்ப போட்டோ எடுத்துக் கொண்டது சர்ச்சையானது.
18 ஆண்டுகளுக்கு முன் காதல் ரோஜாவே படத்தில் அறிமுகமானவர் நடிகை பூஜா குமார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த அவர் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசனுடன் உத்தம வில்லன் படத்தில் நடித்தார். தொடர்ந்து விஸ்வரூபம்-2 உத்தம வில்லன் படங்களில் நடித்து வந்தார் இவர் கமல் ஹாசனுடன் நெருங்கி பழகி வருவதாக கூறப்பட்டது.
இருவரும் சிங்கப்பூர் தெருக்களில் சுற்றி வந்த போட்டோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ள கமல் சிங்கப்பூர் சென்ற போது பூஜா குமாரும் சென்றுள்ளார் என சொல்லப்பட்டாலும் இதில் பூஜாகுமாருக்கு என்ன வேலை என்கிற கேள்வியையும் அவரது ரசிகர்கள் எழுப்பி வந்தனர்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் வெப் சீரிஸ்களில் நடிக்க தொடங்கி விட்டார் அம்மணி. சமீபத்தில் வெளியான, ஃபர்பிடன் லவ் என்ற படத்தில் தன்னை விட வயது குறைவான நடிகருடன் படுக்கையறை காட்சியில் நடித்து சர்ச்சையை கிளப்பினார்.
இந்நிலையில், தற்போது தமிழ்நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். பூஜாகுமார் சிபிராஜ்-ஐ விட ஐந்து வயது மூத்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.