ஒரு ஆணை கட்டிப்பிடித்திருக்கும் அனிஷா - இவர் தான் புது மாப்பிள்ளையாம்..!


நடிகர் விஷாலுக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த நடிகையான அனிஷா ரெட்டி என்பவருக்கும் கடந்த வருடம் ஐதராபாத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் விமரிசையாக நடைபெற்றது. 
 
ஆனால், அதற்கடுத்த சில மாதங்களிலேயே இருவருக்கும் திருமணம் நடைபெறாது என்ற தகவல்கள் வெளியாகின. இருவர் தரப்பிலிருந்தும் அது குறித்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. 
 
விஷாலுக்கு திருமணம் நடைபெறுமா.? நடைபெறாதா..? என்ற கேள்வி நிலவி வந்தது. இதனிடையே, விஷாலுக்காக நிச்சயம் செய்யப்பட்ட அனிஷா ரெட்டிக்கும் வேறொருவருக்கும் சில தினங்களுக்கு முன்பு திருமண நிச்சயம் நடைபெற்றதாகத் தகவல் வெளியானது. 
 

வேறு ஒருவருடன் திருமணம்

 
இவர்களது திருமணம் வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அனிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பக்கத்தில் ஒரு ஆணை கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். 
 
மேலும், "எப்போதும் ஒன்றாக இருப்போம்", என அதில் குறிப்பிட்டு, anatarasircar, nin_ajji ஆகிய இரு இன்ஸ்டா ஐடிக்களை டேக் செய்துள்ளார். nin_ajji எனும் இன்ஸ்டா ஐடிக்கு சொந்தகாரர் பிரணப் சீதாராமன் எனும் மென்பொறியாளர். எனவே அனிஷா மணமுடிக்க உள்ள மாப்பிள்ளை இவர் தான் என நெட்டிசன்கள் முடிவுக்கு வந்துவிட்டனர். அவரது புகைப்பட பதிவு அதனை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.
Blogger இயக்குவது.