ரஜினிக்கு விழுகிற அடியில் மற்ற நடிகர்கள் அரசியலுக்கு வரவே பயப்படணும் - முன்னாள் நடிகர் சீமான் பாய்ச்சல்..!
தமிழில் 1994-ம் ஆண்டு வெளியான அமைதிப்படை படத்தில் நடிகராக அறிமுகமான சீமான் 1996-ம் பாஞ்சாலங்குறிச்சி என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.
அதனை தொடர்ந்து 1998ல் இனியவளே மற்றும் 2000-ம் ஆண்டு வீரநடை என்ற படங்களை இயக்கினர். அதனை தொடர்ந்து, சில படங்களிலும் நடித்தார். 2006-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான "தம்பி திரைப்படம்" நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து, அரசியல் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு "நாம் தமிழர்" என்ற ஒரு கட்சியை நிர்வகித்து வருகிறார். வெறுமனே லெட்டர் பேடு கட்சியாக இல்லாமல் களத்திலும் இறங்கி அடிக்கிறார் சீமான்.
தமிழகத்தில் இவருக்கு 2% முதல் 3% வரையிலான ஓட்டும் இருக்கிறது. இவருடைய முதல் முக்கியமான கொள்கை இவர் ஆட்சிக்கு வருகிறாரோ இல்லையோ..? தமிழர் அல்லாத ஒருவர் ஆட்சிக்கு வர கூடாது என்பது தான்.
சொல்லப்போனால் யார் தமிழன் என்று இவரிடம் தான் அடையாள அட்டை வாங்க வேண்டும் போல என்று அரசியல் நோக்கர்கள் கிண்டல் செய்யும் அளவுக்கு தமிழ் தேசிய அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இவருடைய அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துகொண்டு தான் இருகின்றன. சரி, அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.. என்று விட்டு விடலாம்.
ஆனால், ரஜினி, கமல் ஆட்சிக்கு வரக்கூடாது என்றும் அவர்கள் தமிழ் நடிகர்கள் தான். ஆனால், தமிழர்கள் கிடையாது என்று கூறுகிறார் சீமான். இந்நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் புஷ்வாணமாகி விடுவார் என விமர்சித்துள்ளார்.
காமராஜர், கக்கன் போன்ற ஆட்சியாளர்கள் தான் தமிழக மக்களுக்கு தற்போது தேவை என்றும் சீமான் கூறினார். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு அரசியலில் விழும் அடியில், விஜய் உட்பட எந்த நடிகரும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றக் கூடாது என்று முன்னாள் நடிகரான சீமான் கூறியுள்ளார்.