ரஜினிகாந்த் தொடங்கவுள்ள கட்சியின் பெயர் இது தான் - சின்னம் என்ன தெரியுமா..?
2021 தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில் இருந்து பல பெரிய கட்சிகள் தூக்கத்தை தொலைதுள்ளன.
இதனால், ரஜினிகாந்த் இந்த கட்சியின் முகம், அந்த கட்சியின் B டீம் என அவர் மீது அவதூறு குற்றசாட்டுகளை பரப்பும் வேலையில் இறங்கி விட்டனர். வரும் சட்ட மன்ற தேர்தலை சந்திக்கும் அரசியல் கட்சிகளுக்கான சின்னம் ஒதுக்கீடு தேர்தல் ஆணையம் சார்பில் ஒதுக்கப்பட்டுகொண்டிருகின்றது.
சமீபத்தில், தனது கட்சியை பதிவு செய்த ரஜினிகாந்த் தனது கட்சியை "மக்கள் சேவைக் கட்சி" என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பெயர்ப்பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது "அண்ணாத்த" படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த், இம்மாத இறுதியில் தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்தார். இந்நிலையில், மக்கள் சேவைக் கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 234 தொகுதிகளுக்கும் பொதுசின்னம் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த கட்சிக்கும் சின்னமாக "பாபா" படத்தில் இடம் பெற்ற "ஹஸ்தா" முத்திரை சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் ரஜினி தரப்பு கேட்டதாகவும், அந்தச் சின்னம் ஒதுக்கப்படாததால், ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், இந்த சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தவரின் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.