சென்சார் போர்டுடன் மல்லு கட்டும் "மாஸ்டர்" படக்குழு - இது தான் காரணமாம்..!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் தெலுங்கு டீஸர் நேற்று மாலை வெளியானது. தமிழில் மாஸ்டர் டீஸர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தாலும், தெலுங்கு வெர்ஷன் டீஸரை பார்த்த ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர். 
 
காரணம் டப்பிங்கில் ஏற்பட்டுள்ள கோளாறும், பிழையும் தான். டப்பிங் மிக மோசமாக இருப்பதாகவும், சில இடங்களில் சொற்களே தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாகவும் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். 
 
அதுமட்டுமின்றி, விஜய் சேதுபதியின் குரலுக்கும் காட்சி அமைப்புக்கும் பொருந்தவில்லை. இந்தியாவில் முதன்மையான இடத்தில் இருக்கும் விஜய் போன்ற முன்னணி நடிகரின் வேற்றுமொழி டீஸர் உருவாக்கத்தில் இவ்வளவு மெத்தனமாக இருப்பதா? என பரவலாக கருத்துக் கூறப்படுகிறது. 
 
இதுகுறித்து ஷ்யாம் எனும் தெலுங்கு ரசிகர் ஒருவர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெயரை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.தயவுசெய்து டப்பிங்கில் கவனம் செலுத்துங்கள்” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
 
இது ஒரு பக்கம் இருக்க, மாஸ்டர் படத்தை சென்சார் குழு படத்திற்கு "U" சான்றிதழ் தரமுடியாது என்று கூறியுள்ளதாம். மது அருந்தும் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் அதிகம் இருப்பதால் "U/A" சான்று கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
Blogger இயக்குவது.