"தெறித்து ஓடிய நயன்தாரா - நடிக்க ஒப்புக்கொண்ட சிம்ரன்" - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


நடிகை சிம்ரன் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் அயுஷ்மான் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான‘அந்தாதுன்’ திரைப்படம். 
 
இந்த படம் 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பிளாக் ஹீமர் படமான இதை ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார். 
 
வசூல் மற்றும் வரவேற்பு ரீதியாக மட்டுமின்றி சிறந்த இந்தி திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளின் கீழ் அந்தாதுன் படத்திற்கு 3 தேசிய விருதும் கிடைத்தது. தற்போது இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல நடிகரான தியாகராஜன் கைப்பற்றியுள்ளார். 
 
தனது மகன் பிரசாந்தை ஹீரோவாக வைத்து அந்தாதுன் படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளார்.முதலில் தெலுங்கு ரீமேக் படங்களுக்கு புகழ் பெற்ற மோகன் ராஜா இந்த படத்தை இயக்குவதாக முடிவானது. ஆனால் அவர் இந்த படத்தில் இருந்து விலகியதை அடுத்து, ஜோதிகா நடிப்பில் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை இயக்கி ஜே.ஜே.பிரட்ரிக் இயக்க உள்ளார். 
 

தெறித்து ஓடிய நயன்தாரா

 
இந்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் தபு நடித்த நெகட்டீவ் ரோல் தான். கள்ளக்காதலுக்காக கணவனை போட்டுத்தள்ளும் கதாபாத்திரத்தில் செம்ம போல்டாக நடித்திருப்பார். இதில் நடிக்க ஐஸ்வர்யா ராய் மற்றும் நயன்தாரா உள்ளிட்ட டாப் ஹீரோயின்கள் பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 
 
பல நடிகைகள் துண்டை காணோம் துணியை காணோம் என தெறித்து ஓடிவிட்ட நிலையில் தற்போது அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் நடிக்க இடையழகி சிம்ரன் ஒப்புக்கொண்டுள்ளார். 
 
இதுகுறித்த தகவலை உறுதி செய்துள்ள சிம்ரன், இந்த கதாபாத்திரம் தனக்கு நிச்சயம் பெயர் வாங்கி கொடுக்கும் என்றும், மீண்டும் பிரசாந்த் உடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 
 
நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்ரன் நடிக்க உள்ள படத்தின் கதாபாத்திரம் கொஞ்சம் ஏடாகூடமாக இருப்பதால் ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம்? என அதிர்ச்சியில் இருப்பதாக செய்தி.
Powered by Blogger.