ஜனவரி மாதம் "அசுரன்" எங்கு திரையிடப்படுகிறது என்று தெரிந்தால் ஆடிப்போயிடுவீங்க..!
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 4ஆம் முறையாக தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் அசுரன். இதே கூட்டணியில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த வடசென்னை முடிந்து அதனுடைய இரண்டாம் பாகத்தை எதிர்நோக்கியிருந்த ரசிகர்களுக்கு வேறொரு புதிய படம் என்றதும் ஏமாந்து போனார்கள்.
ஆனால், அசுரன் என்ற அதிரடியான படத்தை கொடுத்தது தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி. இப்படத்தில் தனுஷ் இணைந்து பசுபதி, மஞ்சுவாரியர், கென் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் பல விருதுகளை இந்த ஆண்டு வாங்கி குவித்தது.
இந்நிலையில், ரசிகர்கள் ஆடிப்போகும் அளவுக்கு ஒரு அப்டேட் வந்துள்ளது. ஆம், தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமிதம் கொள்ளும் அளவிற்கு அசுரன் திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக சர்வதேச கோவா திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது இந்த திரைப்பட விழாவில் தேர்வான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தேர்வாகியுது. மேலும், "தேன்" என்ற தமிழ் படமும் தேர்வாகியுள்ளது.