தன்னை விட 14 வயது குறைவான ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்யும் நயன்தாரா..! - யாருன்னு தெரியுமா..?


தன் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் 'நெற்றிக்கண்'. 'அவள்' படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 
கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 80% முடிந்த நிலையில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதியில் நிறுத்தப்பட்டது.
 
2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்து பெரும் வெற்றிபெற்ற படம் ‘நானும் ரவுடிதான்’. இப்படம் வெளியாகி நேற்றோடு 5 ஆண்டுகள் ஆகின்றன. 
 
அப்படத்தின் நினைவாக விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ரவுடி பிக்சர்ஸ் என்று பெயரிட்டுள்ளார்.2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படமான 'ப்ளைண்ட்' படத்தின் ரீமேக் 'நெற்றிக்கண்' என்று தகவல் வெளியானது. 
 
இது தொடர்பாகப் படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை. 1981-ல் வெளியான ரஜினிகாந்தின் நெற்றிக்கண் தலைப்பை வாங்கி இந்த படத்துக்கு வைத்துள்ளனர். 
 
இதில் நயன்தாரா பார்வையற்றவராக நடிக்கிறார். படத்தின் டிரெய்லரை கடந்த 2020-ம் வருடம் நவம்பர் மாதம் நயன்தாராவின் பிறந்த நாளையொட்டி வெளியிட்டனர்.ஒரு ஊர்ல பாவப்பட்ட ஆட்டுக்குட்டிங்க நிறைய இருந்துச்சாம், அதை தெரிஞ்சுகிட்ட கெட்ட நரி அதோட வேலையை காமிச்சுக்கிட்டே இருந்துச்சாம். 
 
அப்போ ஒரு தைரியமான ஆடு அந்த நரி விழுவதற்காக ஒரு குழியை தோண்டி வச்சுச்சாம். அந்த நரியும் குழில நல்லபடியா விழுந்துச்சாம் என்று நயன்தாரா கதை சொல்வதுபோல் அந்த டிரெய்லர் திகிலாக இருந்தது. 
 

 
இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் சரண் சக்தி நடித்துள்ளார். இவருக்கு தற்போது வெறும் 23 வயது தான் ஆகின்றது. ஆனால், ஹீரோயின் நயந்தாரவுக்கோ 37 வயது ஆகின்றது. 
 
கிட்ட தட்ட 14 வயது குறைவான ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்யவுள்ளார் நயன்தாரா. அநேகமாக, ஃப்ளாஷ்பேக் காட்சியில் இளவயது நயன்தாராவாக நடிக்கும் நடிகைக்கு சரண் ஷக்தி ஹீரோவாக நடிப்பார் என்றே தெரிகின்றது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
Powered by Blogger.