"எல்லாமே தப்பு தப்பா தெரியுது டாக்டர்.." - புதருக்குள் பூவை முகரும் ஸ்ரீதிவ்யா..! - கலாய்க்கும் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் மிகவும் பிரபலமாக வலம் வந்த நடிகை தான் ஸ்ரீதிவ்யா இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் நடித்த இந்த முதல் திரைப்படத்திலேயே தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி அதன் மூலமாக ரசிகர் மத்தியில் எளிதில் பிரபலமானார். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் மூலமாக பல்வேறு திரைப்பட வாய்ப்புகளையும் தட்டி சென்றார்.
மேலும் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாகவும் பல திரைப்படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யா தமிழில் தான் நடிக்கும் திரைப்படத்தின் கதாபாத்திரத்தை மிகவும் பொறுமையாக யோசித்து அதன் பிறகுதான் ஒப்புக்கொள்வார்.
அதுமட்டுமல்லாமல் பொதுவாக குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் மட்டும்தான் நடிகை ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இதன் காரணமாகவே அவருக்கு கிராமத்து கதாபாத்திரமே அவரைத் தேடி வந்தன இந்நிலையில் கவர்ச்சிக்கு நோ சொன்ன ஸ்ரீதிவ்யாவிற்கு இயக்குனர்களும் நோ சொல்லிவிட்டார்கள்.
தற்சமயம் திரைப்பட வாய்ப்புகள் ஏதும் இன்றி நடிகை ஸ்ரீதிவ்யா வீட்டிலேயேதன் முடங்கி கிடக்கிறார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் தான் சங்கிலி புங்கிலி கதவ தொற. இந்த திரைப்படத்திற்கு பிறகாக வேறு எந்த ஒரு திரையிலும் நடிகை ஸ்ரீ திவ்யாவின் முகம் இதுவரை தென்படவில்லை.
இரண்டு ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் இன்னும் லைம் லைட்டிலேயே இருக்கிறார் ஸ்ரீதிவ்யா. இந்நிலையில், புதருக்குள் அமர்ந்துகொண்டு பூவை முகர்ந்து பார்க்கும் படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், எல்லாமே தப்பு தப்பா தெரியுது டாக்டர் என்றும் புதருக்குள் பூகம்பம் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.