சக நடிகைக்கு நச்சென லிப்-லாக் அடிக்கும் குஷ்பு - வைரலாகும் புகைப்படம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டியது தமிழ்நாட்டு ரசிகர்கள்தான். இன்றைக்கும் வைரல் பேபியாக வலம் வருகிறார் குஷ்பு. குஷ்புவின் இளமைக்கால படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 
 
அதனை ட்விட்டரில் பதிவிட்டவரே குஷ்புதான். குஷ்பு இட்லி, குஷ்பு கோவில், குஷ்பு பெயரில் ஹோட்டல் என்று குஷ்புவுக்கு தனி கோட்டை கட்டியவர்கள் நம் தமிழ் ரசிகர்கள். 
 
1988ஆம் ஆண்டு முதல் இன்று வரை சினிமா துறையிலும் சரி, தற்போது அரசியலிலும் சரி, ஜொலித்து வருபவர் நடிகை குஷ்பு. 1980ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு எல்லாம் கனவுக் கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பு.
 
நடிகை குஷ்பு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 
 
இவர் மீது கொண்ட அளவற்ற அன்பால் ஒருகாலத்தில் அவரது ரசிகர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இவ்வாறு வெள்ளித்திரையில் கலக்கிய குஷ்பூ சின்னத்திரையிலும் களமிறங்கி பல தொடர்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 
 
மேலும் நடிகை குஷ்பு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
 
நடிகை குஷ்பூ இளம் வயதில் சில படங்களில் படு கிளாமராக நடித்துள்ளார். இந்நிலையில் குஷ்பு பாலிவுட்டின் பிரபல நடிகையான பாராஹ்வுக்கு லிப்லாக் கொடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது. 
 
இதை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Blogger இயக்குவது.