"மாஸ்டர் படத்துல விஜய்சேதுபதிக்கு பதிலா வேற ஆளுனா அது நீங்க தான்.." - ரசிகரின் கருத்துக்கு பார்த்திபன் பதிலை பாருங்க..!


நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான திரைப்படம் 'மாஸ்டர்'. இதனை ‘மாநகரம்’ மற்றும் 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். 
 
இவருடன் விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்துள்ளார். இந்த இயக்குநரின் இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதினால் விஜய்யின் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. 
 
படம் வெளியான பின் அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியானதா என்று கேட்டால்.. அது சந்தேகம் தான்.கதை நன்றாக இருந்தாலும், அதனை தாங்கி நிற்கும் திரைக்கதை சலிப்பு தட்டுவது போல இருந்தது ரசிகர்களை ஏமாற்றி விட்டது. 
 
இருந்தாலும், இந்த படத்திற்கு போட்டியாக வந்த ஈஸ்வரன், புலிக்குத்திபாண்டி போன்ற படங்கள் எதிர்மறை விமர்சனங்களை பெற்றதால் பொங்கல் வின்னர் ஆனார் மாஸ்டர். 
 
இந்த படத்தில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் நடிகர் விஜய்சேதுபதி ஏற்று நடித்த பவானி கதாபாத்திரம் தான்.கொடூரமான வில்லனாக இருந்தாலும் ஹீரோவுக்கு நிகரான ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டதால் மாஸ் காட்டிவிட்டார் விஜய் சேதுபதி. 
 
இந்நிலையில், மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக வேறு யாரவது என்றால் அது நிச்சயம் நடிகர் பார்த்திபனாக தான் இருக்க முடியும் என்று ரசிகர் ஒருவர் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
 

இதற்கு பார்த்திபன், "இப்படி பத்த வைக்கிறீங்க...ஆனா ..... பத்த மாட்டேங்குது" என தனக்கே உரிய பாணியில் பதில் அளித்துள்ளார்.
Blogger இயக்குவது.