"வா தலைவா.. வா தலைவா... - எவ்வளவு நாள் ஆச்சு உங்கள இப்படி பாத்து..!" - அதிரடிக்கு தயாரான ஷங்கர்..!
இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தமிழ் இயக்குனர் ஷங்கர். அவரது இயக்கத்தில் வெளிவந்த படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
பிரம்மாண்டமாக ஒரு படத்தை எடுப்பது எப்படி என்பதை எப்போதோ ஆரம்பித்தவர். அவரது வழியில்தான் இன்று பல இயக்குனர்கள் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
'பாகுபலி' படங்களின் வெற்றிக்குப் பிறகு பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் ராஜமவுலி பக்கம் நகர்ந்துவிட்டது. அதற்குப் பிறகு ஷங்கர் இயக்கிய '2.0' படம் பிரம்மாண்டமாக இருந்தாலும் அப்படம் 'பாகுபலி' வசூலை நெருங்கக் கூட முடியவில்லை.
தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு பல மொழி நடிகர்கள் நடிக்கும் சரித்திரப் படம் ஒன்றை அவர் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
'பாகுபலி' படங்களின் பிரம்மாண்டத்தையும் மீறும் அளவிற்கு பெரும் பட்ஜெட்டில் அப்படத்தை அவர் உருவாக்கப் போவதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில்தான் தெலுங்கு நடிகர்களான பவன் கல்யாண், ராம் சரண் ஆகியோர் நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியானது.
ஒரு வேளை இந்த சரித்திரப் படத்திற்காகக் கூட ஷங்கர் அவர்களை சந்தித்துப் பேசியிருக்கலாம் என்கிறார்கள். தற்போதைய தகவல்படி கன்னட நடிகரான 'கேஜிஎப்' ஹீரோ யஷ் நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
தமிழ் நடிகரான விஜய் சேதுபதியும் ஒரு நாயகனாக நடிக்கப் போகிறராம். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இருந்தும் சிலரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
2022ம் ஆண்டு ஆரம்பமாகும் இப்படம் 2026ல் தான் வெளிவரும் என்று சொல்கிறார்கள். அடுத்த சில வாரங்களில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் எனத் தெரிகிறது.