"இதையே நான் பண்ணியிருந்தா எல்லோரும் என்ன பொழந்திருப்பங்களே டா.." - மூக்கை சிந்தும் அட்லி..?!


அட்லீ இயக்குனர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து விட்டு "ராஜா ராணி (2013)" திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . 
 
இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் "முகப்புத்தகம்" என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார். பின்னர் இவர் இயக்கிய தெறி திரைப்படத்திற்காக விஜய் விருது வென்றுள்ளார். 
 
இவர் இயக்கி, விஜய் நடித்த மெர்சல் படமானது தீபாவளி பண்டிகை அன்று வெளியானது மற்றும் விஜய் நடிப்பில் மீண்டும் "பிகில்" என்ற திரைப்படம் தீபாவளி 2019 வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
 

அட்லி இல்ல சுட்லி

 
இவர் இயக்கிய பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் காப்பி இயக்குனர் என்ற ஒரு பெயர் இவருக்கு உள்ளது. இன்னும் சில நெட்டிசன்கள் அட்லி இல்லை சுட்லி என்று கூட கலாய்த்து வருகிறார்கள்.

இதில் உச்ச கட்ட கூத்து என்னவென்றால் மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனை சந்திக்க நடிகர் விஜய்யும், இயக்குனர் அட்லியும் சென்றனர்.
 

மூக்கை உடைத்த உலக நாயகன்

 
சென்ற இடத்தில் கமல்ஹாசன் செய்த காரியம் அன்றைய தினம் தேசிய அளவில் ட்ரெண்டாகி பல் இழித்தது. அது தான்.. கமல்ஹாசன் தனது அலுவலகத்தில் ஒட்டி வைத்திருந்த அபூர்வ சகோதரர்கள் போஸ்டர்.

இது குறித்து ஒரு பேட்டியில் கமல்ஹாசனிடமே கேட்ட போது, "அன்றைய தினம் எனது அபூர்வ சகோதரர்கள் போஸ்டர் ஒட்டி வைக்கப்பட்டதற்கு காரணம் எதுவும் இல்லை. வழக்கமாக நான் நடித்த படங்களின் போஸ்டரை என்னுடைய அலுவலகத்தில் ஒட்டி வைப்பேன். எதேர்ச்சையாக பல படங்களின் போஸ்டர்களை ஒட்டி வைப்பேன். ஆனால், அபூர்வ சகோதர்கள் போஸ்டர் எதேர்ச்சையாக ஒட்டப்பட்டது அல்ல." தெளிவான ஒரு குழப்ப பதிலை தன்னுடைய பாணியில் கூறினார்.
 

அட்லி ட்வீட் போல ஒரு மீம்


இப்படி காப்பி-க்கு பேர் போன அட்லி ஒரு ட்வீட் செய்திருப்பது போன்ற ஒரு மீம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில், செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது.

ஆனால், இந்த போஸ்டர் "Mathieu Lauffray" என்ற புத்தகத்தின் அட்டையில் இருந்து சுடப்பட்டது என ரசிகர்கள் கண்டறிந்து கலாய்த்து வந்தனர்.இதனை அட்லி பார்த்தால் என்ன சொல்வார் என்ற கற்பனையில் ஒரு மீம்-ஐ பறக்க விட்டுள்ளனர் கீச்சக வாசிகள்.
 

 
இதையே நான் பண்ணியிருந்தா எல்லோரும் என்ன பொழந்திருப்பங்களே டா என்று மூக்கை சிந்துவது போல ஒரு மீம் இணையத்தை கலக்கி வருகின்றது.
Powered by Blogger.