திருமணமான இளம் நடிகருடன் குளிர்ச்சி நடிகை லொஜக் மொஜக் - டோஸ் விட்ட தாய்க்குலம்..!


குளிர்ச்சியான நடிகை பற்றி ஒரு பரபரப்பான தகவல் கோடம்பாக்கம் முழுவதும் பரவியுள்ளது. அதாவது சமீபகாலமாக அவருடன் நடித்து வரும், ஒரு நாயகனுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறார். 
 
எந்த படத்தில் நடிக்க வேண்டும், வேண்டாம் என்று கூட அந்த நடிகர் தான் நடிகைக்கு டிப்ஸ் கொடுத்து வருகிறாராம். இருப்பினும் இருவருக்கும் காதல் இல்லை நண்பர்கள் மட்டுமே எனவும் நண்பன் சொல்லே வேதம் என கடைபிடித்து வருகிறாராம் குளு குளு நடிகை. 
 
முன்னணி கதாநாயகர்களில், இரெண்டெழுத்தில் பெயரை கொண்ட நடிகர் நடித்துள்ள படம் ஒன்று இம்மாதம் திரைக்கு வர இருந்தது. ஆனால் தேர்தல் காரணமாக தள்ளி போய் விட்டதாம். 
 
படத்தின் தயாரிப்பாளர் தேர்தலில் போட்டியிடுவதால், படத்தின் 'ரிலீஸ்' தேதி தள்ளி போடப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த படத்தின் கதாநாயன் மிகவும் வருத்தத்தில் உள்ளாராம். 
 
ஆனால், நாயகனுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரிந்தும் குட்டி போட்ட பூனை போல அவருடன் ஊர் சுற்றி வருகிறாராம். படப்பிடிப்பு முடிந்ததும் ஜோடியாக கிளம்பி விடுகிறதாம் இந்த ஜோடி.
 
இதனை அறிந்த தாய்க்குலம் நடிகைக்கே நேரடியாக போன் போட்டு டோஸ் விட்டுள்ளார். ஆனால், அதையெல்லாம் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் அம்மணி தன்னுடைய வேலையை தொடர்ந்து வருகிறாராம்.
 
இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ என்று உச் கொட்டுகிறது கோடம்பாக்கம்.
Blogger இயக்குவது.