"கண்ணாமூச்சி ரே ரே... கண்டுபிடி யாரு..?" - குழந்தை முகத்தோடு இருக்கும் தல அஜித்..! - ட்ரெண்டாகும் புகைப்படம்..!


தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் படு பயங்கரமாக வைரலாகி வருகிறது. தன்னம்பிக்கை, தைரியம், விடா முயற்சி ஆகியவற்றின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் தல அஜித். 
 
ஒவ்வொரு முறையும் கீழே விழும் போது தன்னோட தன்னம்பிக்கை, விடா முயற்சி ஆகியவற்றின் மூலம் முன்னுக்கு வந்துள்ளார். தனது உடலில் ஏகப்பட்ட காயங்களை கடந்து தமிழ் சினிமாவில் ஒவ்வொருவரும் போற்றும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். 
 
அஜித்தை திரையரங்குகளில் மட்டுமே பார்க்க முடியும். பட இசை வெளியீட்டு விழா என்று எந்த படங்களுக்கும் சென்றதுமில்லை. பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல், சமையல் கலை வல்லுநர், தொழில்நுட்ப வல்லுநர், பைலட், புகைப்பட கலைஞர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார். 
 

ஒரே ஆண்டில் ரெண்டு படம்

 
 
தனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என்று கூறியவர் தல அஜித் மட்டுமே. ஆனால், அவருக்குத் தான் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு. 
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது, ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக, ஹூமா குரேஸி, கார்த்திகேய கும்மகோண்டா, பவல் நவகீதன், யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகின்றனர். 
 
அண்மையில், வலிமை படத்தில் அஜித் தனது குடும்பத்தோடு இருக்கும் புகைப்படம் வெளியானது. இந்த நிலையில், தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் க்ளிக் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போது அஜித் குழந்தை முகத்துடன் இருக்கிறார்.
 

குழந்தை முகம்

கருப்பு நிற டிசர்ட்டுடனும், கருப்பு முடியுடனும் கிளீன் சேவ் செய்திருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது வேதாளம் படத்தில் அஜித், கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரோ என்ற வசனம் பேசும் போது எப்படி குழந்தை முகமாக இருக்கும் போது அது போன்ற புகைப்படம் தான் தற்போது வெளியாகியுள்ளது. 
 
வலிமை படம் வரும் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, பிப்ரவரி மாதத்தில் முடிக்கப்படும் நிலையில், தல அஜித்தின் வலிமை ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. 
 

பைக் ரைடு

மேலும், அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 30 ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது. ஆனால், இது குறித்து எந்த முறையான அறிவிப்பும் வெளிவரவில்லை. தற்போது தல அஜித் சிக்கிம் மாநிலத்திற்கு பைக் ரைடு சென்றுள்ளார். 
 
அவர் சிக்கிம் மாநிலத்திலிருந்து திரும்பி வந்த பிறகு வெளிநாட்டில் அதாவது மொராக்கோவில் நடக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொராக்கோவில் எஞ்சியுள்ள அனைத்து காட்சிகளையும் எடுத்து முடித்து படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Blogger இயக்குவது.