"ஆறு மாசம் கடையே போடல சார்..." - கலங்கிய இட்லி கடை சிறுவன் - அஜீத் செய்த உதவி..!


அஜித்தின் உதவும் குணம் பற்றி எல்லோருக்குமே தெரியும். ஆனால், சிலர் இப்படியான விஷயங்களை கிண்டல் செய்து பேசுவதும் உண்டு. அவர் செய்யும் உதவிகள் வெளி உலகத்துக்கு வருவதில்லை. அதற்கு முக்கிய காரணம், தான் செய்யும் உதவி வெளியே தெரிவதை அஜீத் விரும்புவது இல்லை. 
 
உதவி செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர்கள் எதை பற்றியும் யோசிக்க மாட்டார்கள். செய்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால், சிலர் உதவி செய்வதை படமெடுத்து, விளம்பர படுத்தி புகழ் பெறுவதும் உண்டு.
 
எது எப்படியோ. அப்படியாவது உதவி பண்றாங்களே என்று சந்தோஷப்பட வேண்டியது தான். அப்படி, விளம்பரத்திற்காக உதவி செய்பவர்களை குறை சொல்வது சரியான விஷயமாக இருக்க முடியாது. 
 
தற்போது, வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த நிலையில் அவர் வாரணாசியில் சந்தித்த ஒரு இட்லி கடை சிறுவனின் படிப்பு செலவை ஏற்றிருக்கும் தகவல் இப்போது வெளிவந்திருக்கிறது. 
 
ஐதராபாத்தில் வலிமை படப்பிடிப்பில் இருந்த அஜித், படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அங்கிருந்து சிக்கிமிற்கு பைக் பயணம் மேற்கொண்ட செய்தி பரவலாக வெளியானது. இந்த பயணத்துக்கு இடையில் நடந்த ஒரு சம்பவம் இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. 
 
இந்த பைக் பயணத்தில் அவர் வாரணாசிக்கு சென்றிருக்கிறார். அங்கு ஒரு தமிழர் நடத்தும் இட்லி கடையை தேடிப்பிடித்து சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது அந்த கடையில் ஒரு சிறுவன் வேலை செய்திருக்கிறான். 
 
அந்த சிறுவன் அஜித்தை அடையாளம் கண்டு அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி இருக்கிறான். இதனால் அவனுடன் அஜித் பேசி இருக்கிறார். அப்போது அந்த சிறுவன் இது என் அப்பா நடத்தும் கடை தான். 
 
கொரோனா காலத்தில் 6 மாதம் கடை பூட்டி இருந்ததால் மிகவும் வறுமை நிலைக்கு வந்து விட்டோம். பீஸ் கட்ட முடியாமல் எனது படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டேன். என்று கூறியிருக்கிறான். 
 
இதைக் கேட்ட அஜித் அவன் படிப்பு செலவை தான் ஏற்பதாக இட்லி கடைக்காரரிடம் கூறிவிட்டு சென்றதோடு. அந்த பகுதி லொக்கேஷன் மானேஜரை தொடர்பு கொண்டு அந்த சிறுவன் படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு கூறி விட்டுச் சென்றிருக்கிறார்.
Blogger இயக்குவது.