"இன்னா தல...?." - மாஸ்டர் காட்சிகள் லீக் ஆனது இப்படி தானம்..!! - அடக்கொடுமைய..!


விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். 
 
ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் திரைப்படத்தின் டீஸரானது கடந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
 
பட வெளியீடு நெருங்கியதையடுத்து மாஸ்டர் படக்குழு சமீபத்திய சில நாட்களாக படத்தின் ப்ரோமா காட்சிகளை வெளியிட்டு வருகிறது.அண்மையில் வெளியான ப்ரோமாக்களில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி பேசிய வசனங்கள் கவனம் ஈர்த்தன. 
 
இந்நிலையில், இன்று மாலை முதல் படத்தின் காட்சிகள் துண்டு துண்டாக சில நொடி காட்சிகள் லீக் ஆகி படக்குழு மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 
 
இன்னா தல இப்படி ஆகிடுச்சு என்று விவரம் அறிந்தவர்களிடம் விசாரித்ததில் இந்த காட்சிகளை படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தான் லீக் செய்திருக்க வாய்ப்பு உள்ளது என்று பகீர் கிளப்புகிறார்கள்.
 
படத்தின் விளம்பரத்திற்காக இப்படியான விஷயங்களை செய்திருக்கலாம் என்றும் விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றனர். படத்தை திருட்டுதனமாக வெளியிடும் நபர்கள் முழு படத்தையும் தான் வெளியிடுவார்கள். ஆனால், இங்கே ஒரு நொடி.. இரண்டு நொடி என மட்டுமே காட்சிகள் வெளியாகியுள்ளது. 
 
எனவே, படக்குழுவிற்கு சம்பந்தம் இல்லாத நபர் இதனை செய்திருக்க வாய்ப்பே இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாக கூறுகிறார்கள். தமிழ் சினிமாவில் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் லீக் சர்ச்சை கலாச்சாரம் இரண்டு பெரிய ஹீரோக்கள் நடித்துள்ள படத்திற்கு கூடவா..? தேவைப்படுகின்றது.
 

 
ஆனால்.. படக்குழு கடந்த ஒரு வாரமாக லட்சம் லட்சமாக செலவு செய்து தொலைகாட்சிகளில் குட்டி குட்டியாக ஏழு ப்ரோமோக்களை வெளியிட்ட போது கூட கிடைக்காத ரீச்.. இப்போது லீக் ஆகிவிட்டது என்று சொன்னதும் வாட்சப், டெலிகிராம் என இலவசமாக சகட்டு மேனிக்கு வைரலாகி கிடக்கிறது என்றால் பாத்துக்கோங்க...

எல்லாம் லீக் என்ற ரெண்டெழுத்து வார்த்தைக்கு இருக்கும் கிருப.. கிருப.. கிருப.. தான் மக்களே.
Blogger இயக்குவது.