"என்ன சிம்ரன் இதெல்லாம்.." - இளம் நடிகைகளை மிஞ்சிய கவர்ச்சி போஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்...!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக சேர்ந்து நடித்து பிரபலமான இவர் பேட்ட திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார். 
 
90களில் இடுப்பழகி என்ற பட்டத்துடன் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை சிம்ரன். திருமணத்தின் பின்னரும் நடிப்பதை நிறுத்த வில்லை. மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் குடும்ப புகைப்படத்தினை வெளியிட்டதால் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர். 
 
தற்போது மாதவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் 3 ஆண்டுகளாக காதலித்து வந்த தீபக் என்பவரை திருமணம் முடித்தார். 
 
திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்க போட்ட சிம்ரன் இப்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில், சிம்ரன் வெளியில் ஷாப்பிங் செல்லும் போதும், விழாக்களுக்கு வரும் போதும் கவர்ச்சியான உடை அணிந்தே சென்று வருகிறார். 
 
 
தற்போது, டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றில் கவர்ச்சியாக உடல் அசைவுகளை வெளிப்படுத்தி அவர் ஆடும் நடன வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிற நிலையில், இந்த வயதிலும் இப்படியா..? உங்களுக்கு வயசு ஆகவே இல்ல என்று கூறி வருகிறார்கள். 
 
 
இதை தொடர்ந்து இவர் புதிதாக யூ டியூப் ஒன்றையும் துவங்கியுள்ளார். சிம்ரன் அண்ட் சான்ஸ் பிலிம் என்ற பெயரில் ஆரம்பித்துள்ள இதில், சிம்ரன் அவர் சம்மந்தமான சில வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். 
 
 
அந்த வகையில் காதலர் தினத்தன்று, ஹிந்தி மொழியில் உருவாகியுள்ள அழகிய காதல் பாடலுக்கு நடனம் ஆடி, அதனை அவர் யூடியூப் பக்கத்தில் வெளியிட, ஒரே நாளில் லட்ச கணக்கான ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். 
 
 
மேலும், இந்த வீடியோ இரண்டு நாட்களை ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு நடிகை சிம்ரனும் தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 


இந்நிலையில், தாமரை பூக்கள் இருக்கும் குளத்தில் கவர்ச்சி உடையில் படுத்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம் என்று வாயடைத்து போயுள்ளனர்.
Powered by Blogger.