மாஸ்டர் விஜய் சேதுபதியின் படமா..? - என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி அளித்த அதிரடி பதில்..!
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஸ்டார் ஹீரோ படம் வெளியாகியுள்ளதால் மக்களும் குடும்பம் குடும்பமாக தியேட்டர் சென்று படம் பார்த்து வருகின்றனர். மாஸ்டர் படத்தினால் தங்களது துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளதாக திரையரங்க உரியாமையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடைதிறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, அவரிடம் மாஸ்டர் படம் குறித்த பல கேள்விகள் எழுப்பப்பட்டது. மேலும் அப்போது மாஸ்டர் படம் விஜய் சேதுபதியின் படம் தானா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, "இந்த கேள்வி அவசியமே இல்லாத கேள்வி, வேறு கேள்வி கேளுங்கள். "விஜய் சார், தமிழக அரசு, லோகேஷ் கனகராஜ் மற்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி.
ஏனென்றால் மக்கள் திரும்பவும் திரையரங்கிற்கு வரத் தொடங்கியுள்ளார்கள். இது பலருக்கு திரும்பவும் வாழ்க்கையையும், நம்பிக்கையையும் தொடங்கி வைத்துள்ளது. 'மாஸ்டர்' படம் இப்படி வந்ததற்கு விஜய் சார் மட்டுமே காரணம்". " என கூறியுள்ளார்.