நயன்தாராவுக்கு திருமணம் - எங்கே, எப்படின்னு தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க..?


தமிழ் நடிகைகளின் சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் நயன்தாரா தமிழ் ரசிகர்களின் ஆதர்ச நாயகியாக இருந்து வருகிறார் , தனது நடிப்பாலும் , அழகாலும் , கடின உழைப்பாலும் , தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார் நயன்தாரா. 
 
எத்தனை நடிகைகள் வந்தாலும் அவர்கள் அனைவரையும் பின்னுக்குத்தள்ளி தனக்கான முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார் அவர் . வயது ஏற ஏற அவரது அழகும் உடற்கட்டும் ரசிகர்களை கட்டிப் போட வைக்கிறது என்றே சொல்லலாம். 
 
நயன் என்னதான் நடிகைகளின் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவரது காதல் வாழ்க்கை கசப்பான அனுபவங்களை கொண்டவையாகும் . சில காதல் தோல்விகளுக்கு பின் தனுஷ் தயாரிப்பில், விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வெளிவந்த 'நானும் ரவுடிதான்' படத்தில் நடிக்கும் போது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனைக் காதலிக்க ஆரம்பித்தார். 
 
கடந்த ஐந்து வருடங்களாக காதல் பறவைகளாக பல நாடுகளையும் சுற்றி வந்துள்ளது இந்த காதல் ஜோடி. இருவரும் சென்னையில் ஒரே பிளாட்டில்தான் கடந்த சில வருடங்களாக வசிக்கிறார்கள். 
 
புத்தாண்டை முன்னிட்டும் ஜோடியாக புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் பொறாமையை ஏற்படுத்தினார்கள். இந்த ஜோடி எப்போது திருமணம் செய்து கொள்ளும் என்று பலரும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். 
 
இப்போது இருவருக்கும் பிப்ரவரி மாதம் முறைப்படி திருமணம் நடக்க உள்ளதாகவும் ஆகயாத்தில் விமானத்தில் பறந்தபடியே இருவரது திருமணமும் நடைபெரும் எனவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது வழக்கம் போல வதந்தியா அல்லது உண்மையா என்பது விரைவில் தெரிய வரும். 
 
சினிமா நட்சத்திரங்களின் காதல் திருமணங்கள் எப்போதுமே திடீரென்றுதான் நடக்கும். அது போல இந்தத் திருமணமும் திடீரென நடக்குமா அல்லது அனைவரையும் அழைத்து நடத்துவார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
Powered by Blogger.