"தம்பி.. அந்த பொண்ணு உங்க அப்பா செட்டு பா.." - வாரிசு நடிகரை பார்த்து சிரிப்பாய் சிரிக்கும் கோலிவுட்..!


சினிமா வட்டாரம் என்றாலே அங்கிருந்து வரும் தகவல்களை கிசுகிசு மற்றும் சர்ச்சை என்று வகை பிரித்து விடலாம். ஆனால், இது என்ன வகை என்றே தெரியவில்லை. 
 
அப்படித்தான் இருக்கிறது இந்த விவகாரம். பொதுவாக இளம் நடிகர்கள் தங்களை விட வயது அதிகமான பெண்களை ரூட்டு விடுவதும் காதல், கசமுசா என ஊர் சுற்றுவது வழக்கமாக நடக்கும் ஒன்று தான். 
 
ஆனால், வாரிசு நடிகர் ஒருவர் தன்னுடைய அப்பா செட்டில் இருக்கும் ஒரு நடிகையுடன் நெருக்கமாக இருப்பது ஒட்டு மொத்த கோடம்பாக்கத்தையும் சிரிப்பார் சிரிக்க வைத்துள்ளது. 
 
தன்னுடைய முதல் படத்தை அந்த பெரிய இயக்குனரிடம் கொடுத்து கோடிகளை கொட்டி செலவு செய்து கடைசியில் அந்த படத்தை அப்படியே குப்பையில் தூக்கி போட்டு விட்டு புதிய இயக்குனருடன் அதே படத்தை எடுத்தார் நடிகர். 
 
ஆனால், அதிலும் ஒரு கொடுமை பாருங்க,.. அந்த படத்தை பார்க்க ஆளை காணோம். இதில், கொடுமை என்னவென்றால் இரண்டு முறை ரீமேக் செய்தும் அந்த படத்தின் ஒரிஜினல் தமிழ் டப்பிங் படத்தின் ஒளிபரப்பு உரிமையை தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டு வாங்கின. 
 
அடேய்.. நான் அந்த படத்தை தமிழில் ஒன்னுக்கு ரெண்டு தடவ ரீமேக் பண்ணி இருக்கேன் டா என்று புலம்பினார் நடிகர். பொதுவாக, வாரிசு நடிகர்கள், நடிகைகள் என்றாலே கோடம்பாக்கத்தில் தனி கவனிப்பு இருக்கும். புதுமுக நடிகர்களை காட்டிலும் அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் இயல்பாகாவே அதிகம். 
 
அந்த மரியாதையை கெடுத்துக்கொள்ளும் விதமாக தன்னை விட 15 வயது அதிகமான நடிகையுடன் நெருக்கமாக இருக்கிறார் நடிகர். நடிகை பெரிய மனசு பண்ணி விலகி போனாலும் நடிகர் விடுவதாக இல்லையாம். 
 
ஏற்கனவே இது குறித்து கிசுகிசு வெளியான போது அடக்கி வாசித்த நடிகர் தற்போது மீண்டும் நடிகையுடன் நெருக்கம் காட்டுகிறாராம். மேலும், தற்போது கமிட்டாகியுள்ள படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகையை சிபாரிசு செய்கிறாராம். 
 
அவரோட மகன் என்பதால் தான் உங்களுக்கே ஹீரோ வாய்ப்பு. இதில், நீங்க இன்னொரு ஆளுக்கு சிபாரிசா.. காஸ்டிங் விஷயத்துல எல்லாம் தலையிடாதிங்க தம்பி என்று ஓப்பனாகவே சொல்லிவிட்டாராம் இயக்குனர்.
Blogger இயக்குவது.