போட்டோ ஷூட்டின் தொபுக்கட்டீர் என தவறி விழுந்த நடிகை - கேமரா மேன் செய்த வேலையை பாருங்க..!


தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஹனிரோஸ். இவர் போட்டோ சூட் எடுக்கும் போது கீழே விழுந்து இருக்கிறார். தமிழில் ஜீவாவுடன் சிங்கம் புலி படத்தில் நடித்து பிரபலமானவர் ஹனிரோஸ். 
 
முதல் கனவே, மல்லுக்கட்டு, காந்தர்வன் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். கேரளாவை சேர்ந்த ஹனிரோஸ் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். 
 
தமிழில் இழுத்து போத்திக்கொண்டு நடித்த இவர் மலையாளம், தெலுங்கில் கவர்ச்சி ஆற்றை ஓட விட்டார். நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசிலோடு நடித்த ஒரு மலையாள படத்தில் படு மோசமான படுக்கையறை காட்சியில் பார்போரை சூடேற்றியிருப்பார் அம்மணி.
 
மேலும், இட்டிமானி, பிக்பிரதர்ஸ் படங்களில் மோகன்லாலுடன் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். ஹனிரோஸ் கேரளாவில் ஆற்றங்கரையோரம் போட்டோ ஷூட்டில் பங்கேற்றார். 
 
புதிய பட்டுசேலை ஜாக்கெட் அணிந்து தலை நிறைய பூ வைத்துக்கொண்டு ஆற்றில் இருந்த ஒரு கல்லில் ஏறி போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக சென்றார். 
 
போகஸ் கிடைக்கவில்லை என சற்று பின்னே செல்லுங்கள்.. இன்னும் கொஞ்சம் பின்னே செல்லுங்கள் என சொல்லியுள்ளார் கேமராமேன்.ஒரு கல்லில் இருந்து இன்னொரு கல்லுக்கு காலை தூக்கி வைத்தபோது அந்த கல்லில் பாசி அதிகம் இருந்ததால் கால் இடறி தடுமாறி ஆற்றுக்குள் விழுந்தார். இதனால் கேமராமேன் உள்ளிட்ட படக்குழுவினர் பதறியபடி ஓடினார்கள். 
 
மேக்கப் கலைஞர் ஓடிச்சென்று ஹனிரோஸை தூக்கினார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏற்படவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
Powered by Blogger.