"தலை நிறைய மல்லிகை பூ" - "கண் கூசும் பட்டு தாவணி, பாவாடை" - ரசிகர்களை சுண்டி இழுத்த லாஸ்லியா..!


இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழ் பெற்றார். பிக்பாஸ் சீசன் 1-ல் எப்படி ஓவியாவிற்கு குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் பட்டாளம் குவிந்ததோ அதேபோல் லாஸ்லியாவிற்கு ஆர்மிகள் தூள்பறந்தது. 
 
அவரது க்யூட்டான ஸ்மைல் மற்றும் பப்ளியான முகத்தோற்றமே அவரை பலருக்கும் பிடித்து போக வைத்தது. இடையே கவின் - லாஸ்லியா காதல் விவகாரம் வேறு விஜய் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி.க்கு பக்க பலமாக இருந்தது. 
 
பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது, இருவரும் காதலர்கள் போல் நடந்து கொண்டாலும் வெளியே வந்ததும், இருவருக்கும் சம்மந்தமே இல்லாதது போல் நடந்து கொண்டனர். 
 
இப்போது கவின், லாஸ்லியா காதலிக்கிறார்களா? என்பதே இருவரது ஆர்மிக்கும் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. தற்போது வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்துள்ள லாஸ்லியா தனது உடல் எடையை கணிசமாக குறைந்து ஸ்லிம் லுக்கில் தினந்தோறும் விதவிதமான போட்டோக்களை தட்டிவிடுகிறார்.
 
 
லாஸ்லியா வெள்ளித்திரையில் காலடி எடுத்த வைத்த பின்னர் போட்டோ ஷூட் இல்லாவிட்டால் எப்படி, லாஸ்லியாவும் விதவிதமாக போட்டோஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். 


அந்த போட்டோஸ் எல்லாமே படு ஜோராக சோசியல் மீடியாவில் வைரலாகிவிடுகின்றன. அந்த வகையில்,தற்போது தலை நிறைய மல்லிகை பூ வைத்துக்கொண்டு மின்னும் பட்டு உடையில் எடுத்துக்கொண்ட அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை கூச செய்யும் அளவுக்கு உள்ளன.
Blogger இயக்குவது.