"மாஸ்டர்" - தேறுமா..? தேறாதா..? - என்ன கதை..? - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..? - விமர்சனம்..!


நீண்ட இழுபறிக்குப் பிறகு திரையரங்குகளில் ரிலீஸானது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம். ரசிகர்கள் அதிகாலை 4 மணி காட்சியை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். 
 
அதிகாலை 4 மணி முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டன. முன்பதிவில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து 50% இருக்கைகளுடன் ரசிகர்கள் உற்சாகமாக படம் பார்க்க வந்தனர். 
 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை கடந்த ஆண்டு திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. 
 
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது படகுழுவிற்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. குறிப்பாக,கொரோனா காரணமாக ஒரு வித அச்ச உணர்வில் இறுக்கமான மனநிலையில் இருந்த மக்களுக்கு மீண்டும் அந்த Festival Mode என்ற மனநிலை திரும்ப இந்த படம் அச்சாரம் போட்டுள்ளது என்று கூட சொல்லலாம்.

படத்தின் ஒன் லைன்


பேராசிரியராக இருக்கும் ஹீரோ, சிறுவர் சீர் திருத்த பள்ளி மாணவர்களை வைத்து சட்ட விரோத செயல்களை செய்யும் வில்லன். இருவரும் எப்படி சந்தித்து கொள்கிறார்கள். பிறகு, ஹீரோ என்ன செய்தார்..? வில்லனை அடக்கினாரா..? இல்லையா..? இது தான்.

என்ன கதை

மதுவுக்கு அடிமையாக இருக்கும் இளம் பேராசிரியரான விஜய், ஒரு கல்லூரியில் பணியாற்றுகிறார். அங்கு ஏற்படும் ஒரு பிரச்சனையால் அவர் கல்லூரியில் இருந்து வெளியேறுகிறார். பின்னர் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்றில் வாத்தியாராக நியமிக்கப்படுகிறார். 

அந்தப் பள்ளியை  விஜய்சேதுபதி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அங்கு இருக்கும் சிறுவர்களை, நடிகர் விஜய் சேதுபதி தனது சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார். இதனால் விஜய்க்கும், விஜய்சேதுபதிக்கு இடையே மோதல் ஏற்படுகிறது. அத்துமீறும் விஜய் சேதுபதியை விஜய் எப்படி அடக்குகிறார் என்பதை சுவாரஸ்மாக சொல்லியிருக்கும் படம் தான் இந்த மாஸ்டர்.

என்ன பண்ணியிருக்காங்க 

நடிகர் விஜய் ஜே.டி. எனும் வாத்தியாராக நடித்திருக்கிறார். மாஸான வாத்தியாக வந்து ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார். மற்ற படத்தில் பார்த்த விஜய் போல் இல்லாமல் இதில் புதுவிதமாக தெரிகிறார்.
 
பவானியாக வரும் விஜய் சேதுபதி. கொடூர வில்லனாக வந்து மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தில் விஜய்க்கு இணையாக இவருக்கும் காட்சிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இவருக்கு பக்கபலமாக இருக்கும் அர்ஜுன் தாஸின் நடிப்பும் மிகப்பெரிய சப்போர்ட்.
 
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய், விஜய் சேதுபதி என இரண்டு மாஸ் ஹீரோக்களை வைத்து படத்தை திறம்பட கையாண்டுள்ளார். 
 
இதற்கு மேல் எதை சொன்னாலும் அது படத்தின் ஸ்பாய்லர் ஆகிவிடும். மொத்தத்தில் மாஸான மாஸ்டர். ஆனால், கைதி போன்ற படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் எதோ மிஸ்ஸிங் என்ற உணர்வு ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை.
 

படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க



Blogger இயக்குவது.