இரண்டாவது முறையாக கர்ப்பம் - Bump தெரிய கரீனா கபூர் வெளியிட்ட புகைப்படம்..!


பாலிவுட்டின் முன்னணி நடிகை கரீனா கபூர் கர்ப்பமான செய்தி நேற்று வெளியாகி வைரலானது. கொரோனா பரவல் காரணமாக பிரபலங்கள் ஷூட்டிங் இல்லாமல், வீட்டிலேயே இருப்பதால், இதெல்லாம் சகஜம் தானே எனலாம். 
 
40 வயதிலும் லீடு ரோலில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை கரீனா கபூர், 2வது முறையாக கர்ப்பமாகி உள்ளார். அமீர் கானுடன் லால் சிங் சத்தா படத்தில் நடித்து வரும் இவர், இந்த லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் ஏதும் இல்லாத நிலையில், கணவர் சைஃப் அலி கானுடன் இணைந்து அடுத்த குழந்தையை ரெடி பண்ணி உள்ளார். 
 
பாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த நட்சத்திர தம்பதிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். ஹிந்தித் திரையுலகின் முக்கிய காதல் திருமண ஜோடிகளில் ஒன்று சைப் அலிகான், கரீனா கபூர் ஜோடி. 
 
பிரபல கிரிக்கெட் வீரர் பட்டோடி, நடிகை ஷர்மிளா தாகூர் ஆகியோரின் மகன் சைப் அலிகான். இவருக்கு ஏற்கெனவே நடிகை அம்ரிதா சிங்குடன் திருமணம் நடந்து நடிகை சாரா அலிகான், இப்ராகிம் அலிகான் என ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். 
 
தன்னுடன் இணைந்து நடித்த நடிகை கரீனா கபூரை 2012ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் சைப் அலிகான். அவர்களுக்கு மூன்றரை வயதில் தைமுர் அலிகான் என்ற ஒரு மகன் இருக்கிறான். 
 
இப்போது கரீனா கபூர் இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார். இது பற்றிய தகவலை சைப்பின் சகோதரி சோஹா அலிகான் நேற்று வெளியிட்டார். தொடர்ந்து நடிகை கரீனா கபூரும் இந்த தகவலை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 
 
 
அதோடு அடுத்த குழந்தை ஆணா, பெண்ணா என்ன நினைக்கிறீர்கள் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். சைப், கரீனா ஜோடிக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். 
 
 
இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் கரீனா கபூர்.
Blogger இயக்குவது.