"Hardcore Fans இதை ஒத்துக்கவே மாட்டாங்க.." - லோகேஷ் கனகராஜை பொழக்கும் விஜய் வெறியர்கள்..!


தியேட்டர் வேண்டவே.. வேண்டாம் OTT-யில் ரிலீஸ் பண்ணுங்க..! கொரோனா ஆச்சுருத்தல்..! இறுதியாக இணையத்தில் லீக்கான படத்தின் காட்சிகள் என பல தடைகைளை தாண்டி, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தமிழ் திரையுலகமே உயிர்பெற திரையரங்குகளில் வெளியாகியுள்ளது மாஸ்டர் திரைப்படம். 
 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக விஜய் மற்றும் விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்து நடித்துள்ளதால் மாஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கின்றது. 
 
மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரின் எதிர்பார்ப்பைபும் பூர்த்தி செய்ததா? இல்லையா?என்ற விவாதங்கள் ஒரு பக்கம்வழக்கம் போல நடைபெற்றுக்கொண்டிருகின்றது.

இந்நிலையில், விஜய்யின் தீவிர ரசிகர்கள், விஜய் வெறியர்களால் சமூக வலைதளங்களில் ஒரு வாதம் பரவலாக வைக்கப்படுகின்றது. அந்த வாதம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜை நோக்கி உள்ளது என்பது வியப்பு.

படம் ஹிட்டா..? ஃப்ளாப்பா..? என்பதை மீறி இப்படியான விமர்சனங்கள் முன்னிலை பெற காரணம் என்ன..? என்றால் இந்த படத்தில் இரண்டு முன்னணி ஹீரோக்கள் இடம் பெற்றுள்ளது தான்.

ஒருவர் தமிழ் சினிமாவில் டாப்பில் இருக்கும் நடிகர் விஜய்.மற்றொருவர் தமிழ்சினிமாவின் சென்சேஷனல் நாயகன் விஜய் சேதுபதி.இந்த கூட்டணியில் படம் உருவாகும் போதே கண்டிப்பாக இப்படி பிரச்னைகள் வரும் என்று பலரும் கணித்திருப்பார்கள். அது இப்போது உண்மையாகியுள்ளது.

ஆம்..படத்தில் இரண்டு லீடிங் ஹீரோ என்றாலும் எந்த கதாபாத்திரத்திற்கு வெயிட் அதிகம் என்ற போட்டியில் வில்லனாக நடித்த நடிகர் விஜய்சேதுபதி ஸ்கோர் செய்துவிட்டார் என்றும் ஹீரோவான நடிகர் விஜய்க்கு அவருக்கு இணையான இடம் இருந்தும் விஜய்யை, விஜய்சேதுபதி முந்திவிட்டார் என்றும் பரவலாக பேசப்படுகின்றது.
 
இதனை விஜயின் தீவிர ரசிகர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்ற ரீதியில் பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்கள் வாயிலாக பதிவு செய்து வருவதை பார்க்க முடிகின்றது.
Blogger இயக்குவது.