MASTER படத்தில் JD வைத்திருந்த புசு புசு பூனை யாருடையது தெரியுமா..? - இதோ புகைப்படம்..!


திரைப்படம் திரையில் வெளியாகி, 50 நாட்களுக்கு பின்னரே OTTயில் வெளியிட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் 15 நாட்களுக்குள்ளாக ஒடிடியில் வெளியானது. 
 
இது வழக்கத்திற்கு மாறான ஒரு நிகழ்வாகும். பொதுவாக திரையில் வெளியாகும் திரைப்படங்கள் திரையில் இருந்து வெளியேறிய பின்னர் மட்டுமே ஒடிடியில் வெளியாகும். 
 
ஆனால் மாஸ்டர் திரைப்படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் போதே ஒடிடி தளத்திலும் வெளியாக இருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இரண்டு நாட்களாக நடைபெற்றது. 
 
இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டுமென்ற கோணத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த படத்தில் JD கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் பூனை ஒன்றை வளர்த்து வருவார். 
 

பூனைக்கு பின் கதை

 
படம் ரிலீசுக்கு முன்பு வெளியான புகைப்படங்களின் மூலம் விஜய் வைத்துள்ள அந்த பூனை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. அதை வைத்து படத்தில் இந்த பூனைக்கு பின் ஏதாவது டீட்டெயிலிங்க் காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர்.
 
ஆனால், இந்த பூனைக்கு படத்தில் வேலையே இல்லை. வெறுமனே கையில் தூக்கிக்கொண்டு சில காட்சிகளில் தோன்றுகிறார் விஜய். அது மட்டுமில்லாமல், வில்லன் விஜய் சேதுபதி மற்றும் ஹீரோ விஜயின் கன்னத்தில் இருக்கும் இரண்டு பேட்ச்களுக்கு பின்னாலும் ஏதாவது டீட்டெயிலிங்க் இருக்கும் என எதிர்பார்த்தார்கள்.
 


ஆனால், படத்தில் அப்படி எதுவும் காட்சிகள் இல்லை.
 
தளபதி ரசிகர்கள் எப்படி விஜய்யை ரசித்தார்களோ, அதே போல் இந்த புசு புசு Persian ரக பூனையையும் அதிகம் ரசித்தனர். இந்த பூனை யாருடையது என, விஜய் ரசிகர்கள்.... 'மாஸ்டர்' படம் வெளியான நாள் முதலே கேள்வி எழுப்பி வரும் நிலையில், இதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது. 
 
விஜய்யின் கல்லூரி நண்பர்களில் ஒருவரும் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருப்பவருமான நடிகர் சஞ்சீவ் தான் இந்த பூனையை வளர்த்து வருகிறாராம். 
 

 
’மாஸ்டர்’ படத்தில் ஜேடி வளர்த்த பூனை தனது வீட்டில் பாதுகாப்பாக உள்ளது என சஞ்சீவ் புகைப்படம் ஒன்றையும் ஷேர் செய்துள்ளார். இந்த பதிவு தற்போது விஜய் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.
Blogger இயக்குவது.