#Record_Low : 50% மட்டுமே அனுமதி உத்தரவால் அதிரடியாக குறைந்த "மாஸ்டர்" முதல் நாள் வசூல்..!
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் ரசிகர்களால் கருதப்படுபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகியுள்ளது.
இப்படம் உலகளவில் முதல் நாளில் மட்டுமே கிட்டதட்ட ரூ. 50 கோடி வரை வசூல் செய்துள்ளது. தளபதி விஜய்யின் படங்களில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த படங்களில் ஒன்றாகவும் மாஸ்டர் திரைப்படம் இடம்பிடித்துள்ளது.
திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த போதிலும்
மாஸ்டருக்கு விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். சிறுவர்
சீர்த்திருத்த பள்ளியில் இருக்கும் மாணவர்களை தன்னுடைய ஆதாயத்துக்காக தவறான
முறையில் பயன்படுத்தும் விஜய் சேதுபதியை ஒரு கல்லூரி பேராசிரியரான விஜய்
ரெய்டு விடுவதுதான் மாஸ்டர் படத்தின் மையக்கரு.
இந்நிலையில் தளபதி விஜய்யின் படங்களில் டாப் 4 திரைப்படங்கள் என்னென்ன தமிழ் நாட்டில் அதிகம் வசூல் செய்தது என்று இங்கு பார்ப்போம்.
1. சர்கார் - ரூ. 31 கோடி
2. பிகில் - ரூ. 26 கோடி
3. மெர்சல் - ரூ. 23.5 கோடி
4. மாஸ்டர் - ரூ. 22 கோடி { 50% இருக்கை }
இதில் 50% இருக்கைகளுடன் 22 கோடி வசூல் செய்திருக்கிறது என்றாலும்.நடிகர் விஜய்யின் கடந்த பத்து ஆண்டு சினிமா வரலாற்றில் இந்த படம் தான் ரெக்கார்டு லோ என்று கூறுகிறார்கள்.