"16 வயதில் தான் அது முதன் முதலாக நடந்தது...." - வெளிப்படையாக கூறிய ஷகீலா..!
சென்னை கோடம்பாக்கம். ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் நடுத்தர வர்க்க அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் சாதாரண வீட்டில் வசித்து வருகிறார் ஷகிலா.ஒருகாலத்தில் மலையாளத் திரையுலகைக் கலங்கடித்த ஷகிலாவுக்கு இந்தியாவைத் தாண்டியும் ஏராளமான ரசிகர்கள். இப்போது அதிகம் அவர் நடிப்பதில்லை.
ஆனாலும், இன்னும் வெளியிடப்படாத அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல், அதற்குள் தேசிய ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருப்பதும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதும் பரவிக் கிடக்கும் ஷகிலாவின் புகழுக்கு உதாரணம்.
சமீபத்தில் பிரபல பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அவர் தன்னுடைய வாழ்கையில் நடந்த சில மோசமான சம்பவங்களை பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
குடும்பம் பற்றி..
அதில், முக்கியமாக தன்னுடைய குடும்பம் பற்றி பேசியுள்ளார். அதில் பேசிய அவர்,அப்பா ஒரு சூதாடி. எப்போது பார்த்தாலும் சீட்டாட்டம், ரேஸ்.. சூதாடுவது இது தான் அவருக்கு முழு நேர தொழில்.
இவருடைய பொழுதுபோக்கு, வாழ்க்கை எல்லாமே சூதாட்டம் தான். போவார் சூதாடுவார், திடீர் என ஒருநாள் ஜெயிச்சுட்டு வந்து நகைகளாக வாங்கி வந்து போட்டு விட்டு அழகு பார்ப்பார், கொஞ்சுவார்.
ஆனால், அடுத்த வாரமே எங்களிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒவ்வொன்றாக கழட்டிக்கிட்டுப் போய் சூதாடுவார். அம்மா, அப்பா அப்புறம் நாங்க ஏழு பிள்ளைகள். இப்படி, அப்பாவிடமும், ஏழு பிள்ளைகளான எங்களிடமும் தனி ஆளாக போராடிட்டு இருந்தாங்க என் அம்மா. இந்தக் கஷ்டம் எல்லாம் எனக்கு ஆரம்ப காலத்தில் தெரியவே இல்லை.
கிட்ட தட்ட பதினைந்து வயது வரை ஏனோ தானோ என்று தான் வளர்ந்தேன். ஆனால், பதினாறு வயசுலதான் எனக்கு ஒவ்வொன்னா தெரிய ஆரம்பித்தது. எங்க அக்காவுக்கும் எனக்கும் 16 வயசு வித்தியாசம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அவங்கதான் என்னைத் தூக்கி வளர்த்தாங்க. என்னோட 16 வயசுல தான் முதன் முதலாக அந்த விஷயம் நடந்தது. என்னை தூக்கி வளர்த்த அக்கா அவங்களோட முதல் குழந்தைக்கு பிரசவத்துக்காகப் போனாங்க.
ஆஸ்பத்திரி போக காசு இல்லை. அப்போதான், எனக்கு வாழ்க்கை என்றால் என்ன..? பணம் என்றால் என்ன..? ஒப்படி எல்லாம் விளங்குது, சரி, இனிமே நாமதான் நம்ம குடும்பத்தைப் பார்க்கணும் என்று முடிவு செய்தேன்.
அதன் பிறகு தான் என்னுடைய வாழ்கையே மாறியது. படிப்பு சுத்தமாக வரவில்லை என்பதால் சினிமாவில் நடிக்க முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.