2 லட்ச ரூபாய் வண்டியால் 2,00,000,0000 சொத்தை தவறவிட்ட விவாகரத்தான நடிகர்..! - ஆப்பு அடித்த இன்ஸ்டா...!


சினிமா பிரபலங்களோ, சின்னத்திரை பிரபலங்களோதிருமண உறவில் விரிசல், விவாகரத்து எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கிறது. சாதரணமாக பலரது வாழ்கையில் நடக்கும் விஷயம் தான் என்றாலும் பிரபலங்கள் என்பதால் இந்த விஷயங்கள் பெரிதாக பார்க்கப்படுகின்றது. 
 
மற்ற படி ஏன் பிரிந்தார்கள், அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதெல்லாம் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். வலியோ, வேதனையோ அவர்களுக்கு மட்டுமே அது தெரியும். சமீப காலமாக சமூக வலைதளங்களின் ஆதிக்கம் உலகம் முழுதும் வலுப்பெற்று வருகின்றது. 
 
இதனை உரிய முறையில் கையாண்டால் பணம் பண்ணலாம். பொழுதை போக்கலாம். பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். ஆனால், தவறாக கையாண்டால் நிலைமை தலைகீழாக மாறிவிடும். பணம், மானம் என பல விஷயங்கள் இழக்க நேரிடும். 
 
அந்த வகையில், இன்ஸ்டாகிராம் பிரபல தொகுப்பாளினி ஒருவர் பதிவு செய்த ஒற்றை போட்டாவால் தனக்கு வர வேண்டிய இருந்த கிட்ட தட்ட 200 கோடி ரூபாய் சொத்தை பிரபல நடிகர் ஒருவர் தவறவிட்டார் என்றால் நம்ப முடிகிறதா..? சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்தான பிரபல நடிகர் ஒருவர் இளம் நடிகையுடன் நெருங்கி பழகி வந்தார். 
 
ஒரு கட்டத்தில், இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு சென்று விட்டார்கள். இது போதாதென்று நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம் திருமணம் செய்து கொள்வது பற்றி பிறகு அறிவிப்போம் என தங்களது காதலை சூசமாக வெளிப்படுத்தினார்கள். 
 
 
மெல்ல மெல்ல காதலில் மூழ்கிய ஜோடி திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு வந்த நிலையில் காதலியின் தந்தை மறைந்ததால் திருமணத்தை சிறிது காலம் ஒத்தி வைத்தனர். அந்த நடிகை வீட்டிற்கு ஒரே வாரிசு. 
 
பெரிய தொழிலதிபரான அவரது தந்தைக்கு வீடு, பங்களா என அக்கட தேசத்தில் கிட்ட தட்ட 200 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன. தற்போது, தன்னுடைய தாயுடன் வசித்து வருகிறார் அம்மணி. 
 
நடிகரை விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்த நடிகை அந்த முடிவில் இருந்து திடீரென பின் வாங்கி நடிகருக்கு டேக்கா கொடுத்து விட்டார். அதற்கு காரணம், பிரபல தொகுப்பாளினி ஒருவர் இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்த ஒற்றை புகைப்படம் தான். 
 
காதலில் இருந்த போது நடிகருக்கு மிகவும் பிடித்த 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக் ஒன்றை பிறந்தநாள் பரிசாக வாங்கி கொடுத்துள்ளார் அம்மணி. இந்த பைக் தான் நடிகையை தற்போது காப்பாற்றியுள்ளது. 
 
இருவரும் காதலித்து கொண்டிருக்கும் போதே நடிகர் பிரபல தொகுப்பாளினி ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக தோழிகள் சிலர் சொல்லி கேட்டபோது நம்பாமல் நடிகரை மலை போல நம்பினார் அம்மணி. 
 
 
சமீபத்தில் அந்த தொகுப்பாளினி கோவா-விற்கு சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிரப்பி வைத்துள்ளார். 
 
அப்படி வெளியிட்ட ஒரு புகைப்படத்தில், காதலனுக்கு பரிசாக கொடுத்த பைக்கை பார்த்த நடிகை அதிர்ந்து போனார். இதனை தொடர்ந்து, ஆளை விடுடா சாமி என்று ஜூட் விட்டு விட்டார் நடிகை. 
 
200 கோடி ரூபாய் சொத்திற்கு சொந்தக்காரியான நடிகையை வெறும் 2 லட்ச ரூபாய் பைக்கால் தொலைத்து விட்டு நிற்கிறார் நடிகர்.
Blogger இயக்குவது.